பேருந்து குறிப்பேடு தாள்கள் ஆங்கிலத்தில் மாற்றப்பட்டுள்ளதாக வெளியான தகவலுக்கு சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் மறுப்பு..!!
Advertisement
ஆரம்ப மென்பொருள் மேம்பாட்டு கட்டத்தில், பேருந்து குறிப்பேடு தாள்கள் ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்டன. இருப்பினும் செயல்படுத்தலின்போது, இந்த பேருந்து குறிப்பேடு தாள்கள் முழுமையாக தமிழில் மாற்றப்பட்டுள்ளது. மேலும் அனைத்து பணிமனைகளிலும் பேருந்து குறிப்பேடு தமிழில் மட்டுமே உருவாக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் பேருந்து குறிப்பேடு தாள்களை ஆங்கிலத்திற்கு மாற்றியுள்ளது" என்ற செய்தி தவறானது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
Advertisement