Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

சுமைக்கு மேல் சுமை

மக்களவை​யில் நேற்றுமுன்தினம் பணப் பரிவர்த்தனை மற்றும் தீர்வு அமைப்புகள் சட்டம் 2007, வருமான வரிச்சட்டம் 2025, நிதிச் சட்டம் 2026 ஆகியவற்றில் திருத்தங்களை மேற்கொள்ளும் நோக்கில், வரி விதிப்பு மற்​றும் பிற சட்​டங்​கள் (திருத்த) மசோ​தாவை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருந்தார். அப்போது, டெல்லியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடி தாக்குதல், அயோத்தி ராமர் கோயில் நன்கொடை திருட்டு விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்க வேண்டுமெனக் கூறி எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இந்த மசோதா மீது விவாதம் நடத்த வலியுறுத்தப்பட்டது. ஆனால், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், வழக்கம் போல் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.

இந்த புதிய மசோ​தா​வின்​படி இனி யுபிஐ, ரூபே கார்டு பணப் பரிவர்த்​தனை​களுக்​கும் கட்​ட​ணம் விதிக்​கப்​படும். ‘‘இதனால் பொது​மக்​களுக்கு பா​திப்பு இருக்​காது. காய்​கறி, பால் வாங்​கு​வது உள்​ளிட்ட அன்​றாட செல​வு​களுக்​கான யுபிஐ பரிவர்த்​தனை​களுக்கு கட்ட​ணம் வி​திக்​கப்​ப​டாது. மிகப்​பெரிய வணிக நிறு​வனங்​களுக்​கு மட்​டுமே கட்​ட​ணம்​ விதிக்​கப்​படும்’’​ என ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருக்கிறார். இந்த கட்டணம், தனிநபர்களுக்கு இடையிலான பரிவர்த்தனைகளுக்கு இருக்காது என்றும், நுகர்வோர் - நிறுவனம், நிறுவனம் - நிறுவனம் இடையேயான பண பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே பொருந்தும் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பணப் பரிவர்த்தனை மற்றும் தீர்வு அமைப்புகள் சட்டம் 2007 மசோதாவின் கீழ் ஒன்றிய அரசு வணிகர்களிடம் இருந்து எம்டிஆர் (வணிகர் தள்ளுபடி கட்டணம்) வசூலிக்கலாம் என்று கூறப்படுகிறது. இது வணிகர்களுக்கு விதிக்கப்படும் கட்டணம். இதனால் மக்கள் பாதிக்கப்படமாட்டார்கள் என ஒன்றிய அரசு ஆணித்தரமாக அடித்துக் கூறுகிறது. ஆனால், அதன் பின்னணியில் ஒரு மறைமுக திட்டமும் இருக்கிறது.

யுபிஐ மூலம் ரூ.2,000க்கு மேல் மேற்​கொள்​ளப்​படும் வணி​கப் பரிவர்த்​தனை​களுக்கு ஒரு குறிப்பிட்ட சதவீதம் வரை கட்​ட​ணம் (எம்​டிஆர் - வணி​கர் தள்ளுபடி வீதம்) விதிக்க ஒன்றிய அரசு அனுமதி அளிக்​கக்​கூடும் எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு அனுமதியளிக்கும் பட்சத்தில் வாடிக்கையாளர்கள் வணிகர்களுக்குப் பேமெண்ட் செய்யும்போது, வணிகர்களிடம் இருந்து குறிப்பிட்ட சதவீத தொகை கட்டணமாகக் கழிக்கப்படும்.

இந்த இடத்தில் தான் ஒரு திருப்பு முனை இருக்கிறது. வருடத்திற்கு ரூ.50 கோடிக்கும் மேல் வியாபாரம் செய்யும் நிறுவனங்கள் இனி இந்த கட்டணம் செலுத்த வேண்டும். ஆன்லைனில் பொருட்கள் விற்கும் நிறுவனங்களும் இதில் அடங்கும். ரூ.2,000க்கு மேல் பொருட்கள் வாங்கும் போது இந்த கட்டணம் வரும். அந்த நிறுவனங்கள் இந்த கட்டணத்தை மக்களிடம் வசூலிக்க வாய்ப்பிருக்கிறது.

எப்படி சுற்றி வந்தாலும், வட்டத்தின் தொடக்கப்புள்ளி மக்களின் மேல் தான் வந்து விழுகிறது. ஏற்கனவே, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, அதனை தொடர்ந்து அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு என மக்கள் மேல் நிறையச் சுமைகள் உள்ளது. இதற்கு நடுவே பரிவர்த்தனை கட்டணம் என்ற பெயரில் மேலும் ஒரு சுமையை மக்கள் மீது ஏற்றி வைத்துவிட்டு தங்களுக்கு எதுவும் தெரியாதது போல் ஒன்றிய அரசு வேடிக்கை பார்க்கிறது.