பிஎஸ்ஏ மோட்டார் சைக்கிள்ஸ் நிறுவனம், ஸ்கிராம்ப்ளர் 650 மோட்டார் சைக்கிளை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதில் 652 சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 45 பிஎச்பி பவரையம், 55 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் உள்ளது. எல்இடி ஹெட் லைட் மற்றும் டெயில் லைட்டுகள் உள்ளன. டூயல் சானல் ஏபிஸ் மற்றும் எல்சிடி இஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளது. முன்புறம் 19 அங்குல ஸ்போக் வீல்கள் பின்புறம் 17 அங்குல ஸ்போக் வீல்கள் இடம் பெற்றுள்ளன. முன்புறம் டெலஸ்கோப்பிக் சஸ்பென்ஷன், பின்புறம் டூயல் ஷாக் அப்சர்வர்கள் உள்ளன. ரேவன் பிளாக், விக்டர் யெல்லோ மற்றும் தண்டர் கிரே வண்ணங்களில் கிடைக்கும். துவக்க ஷோரூம் விலை சுமார் ரூ.3.25 லட்சம். டப் வேரியண்ட் சுமார் ரூ.3.41 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
+
Advertisement


