Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வழிப்பறியில் ஈடுபட்ட சகோதரர்கள் கைது

பெரம்பூர்: கொடுங்கையூர் திருவள்ளுவர் சாலை அருகே நேற்று முன்தினம் போதையில் 2 பேர் பொதுமக்களை மிரட்டி வருவதாகவும்கத்தியை காட்டி மிரட்டி பணப்பறிப்பில் ஈடுபடுவதாகவும் இன்ஸ்பெக்டர் சரவணனுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன்அடிப்படையில் போலீசார் அங்கு சென்று 2 பேரை பிடித்து விசாரணை நடத்தியதில்கொடுங்கையூர் திருவள்ளுவர் சாலையை சேர்ந்த விக்கி (எ) விக்னேஷ் (32) அவரது தம்பி விக்னேஷ் (எ) சின்னராஜ் (28) என்பது தெரியவந்தது. அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

* வியாசர்பாடி உதயசூரியன் நகரை சேர்ந்தவர் அமுல்ராஜ் (26). இவர்நேற்று முன்தினம் வியாசர்பாடி எம்கேபி நகர் வழியாக சென்றபோது அவரை தாக்கி 500 ரூபாயை ஒருவர் பறித்து தப்பினார். இதுகுறித்து அமுல்ராஜ் கொடுத்த புகாரின்படிஎம்கேபி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து வியாசர்பாடி எம்.எஸ்.நகரை சேர்ந்த ரவுடி ஹரிகிருஷ்ணன் (எ) அரியப்பா (28) என்பவரை கைது செய்தனர்.