மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே உள்ள அடியமங்கலம் பெரிய தெருவை சேர்ந்த குமார் மகன் வைரமுத்து (26). மெக்கானிக். இவரும், அதே ஊரை சேர்ந்த 26 வயதான பட்டதாரி பெண்ணும் காதலித்து வந்தனர். இதற்கு பெண்ணின் தாயார் எதிர்ப்பு தெரிவித்தார். இந்நிலையில் கடந்த 15ம் தேதி வைரமுத்து பணி முடிந்து மயிலாடுதுறையில் இருந்து இரவு வீடு திரும்பியபோது, வெட்டி கொலை செய்யப்பட்டார்.இந்த சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிகவினர் மற்றும் வைரமுத்துவின் உறவினர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது, அவர்கள் பெண்ணின் தாயார் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யும் வரை வைரமுத்துவின் உடலை பெற்றுக்கொள்ள மாட்டோம் என்றனர். இதையடுத்து, மயிலாடுதுறை போலீசார், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து வைரமுத்துவின் தாயார் ராஜலட்சுமியை (45) நேற்று கைது செய்தனர். மேலும், பெண்ணின் சகோதரர் குகன்(21), உறவினர் பாஸ்கர்(42), அதே ஊரை சேர்ந்த அன்புநிதி(19) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
+
Advertisement