பாலிவுட் நடிகர் கோவிந்தா வீடு திரும்பினார்
Advertisement
மும்பை: திடீர் மயக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாலிவுட் நடிகர் கோவிந்தா வீடு திரும்பினார். நினைவிழந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கோவிந்தாவுக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்குப் பின் நினைவு திரும்பிய நிலையில் வெளியே நடந்து வந்த கோவிந்தா, நிருபர்களிடம் பேசினார். அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி மேற்கொண்டதால் களைப்பு ஏற்பட்டு மயங்கிவிட்டதாகவும், சிகிச்சைக்குப் பின் தற்போது தான் நலமுடன் இருப்பதாகவும் கூறினார்.
Advertisement