பரூச்: குஜராத், பரூச் மாவட்டத்தில் மருந்து தொழிற்சாலையில், உள்ள பாய்லர் நேற்று காலை வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பாய்லர் வெடித்ததால் தொழிற்சாலை கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதில் பணியாற்றி கொண்டிருந்த பல தொழிலாளர்கள் அலறி அடித்து வெளியே ஓடினர். ஆனால் இரண்டு பேர் இடிபாடுகளில் சிக்கி பலியானார்கள். 20 பேர் படுகாயமடைந்தனர். பரூச் கலெக்டர் கவுரவ் மக்வானா, தொழிற்சாலைக்கு உள்ளே இருந்த பாய்லர் வெடித்து சிதறியது. இதில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர் என்றார்.
+
Advertisement
