உடல் எடையை குறைக்கும் இயற்கைப் பொடி
அனைத்து உடல் பிரச்னைகளுக்கும் ஆயுர்வேதத்தில் மருந்து இருக்கிறது. அதை நீங்களே வீட்டில் செய்யலாம். வெந்தயம், ஓமம், கருஞ்சீரகம் பொடியை வெந்நீரில் கலந்து குடித்தால் 3 மாதத்தில் உடலில் உள்ள அனைத்து கழிவு கொழுப்புகளும் கரைந்து உடல் எடை குறையும். எடை குறைவது மட்டுமின்றி… பல பிரச்னைகளுக்கும் இந்த பொடி நல்ல தீர்வாக செயல்படுகிறது. முடி வளர்ச்சி, இதயம் தொடர்பான நோய்கள், மலச்சிக்கல் மற்றும் உடல் எடையை குறைக்க சிறந்தது.வெந்தயம் மற்றும் சீரகத்தின் கலவையை எடுத்துக்கொள்வது உடலில் கொழுப்பை திறம்பட நீக்குகிறது மற்றும் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கிறது. இது கொழுப்பை திறம்பட எரிக்கிறது. கருஞ்சீரகம், ஓமம், வெந்தயம் உடலில் இரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது. இது படிப்படியாக எடையும் குறைக்க உதவுகிறது. தாமதமின்றி உடல் எடையை குறைக்க இந்த பொடியை எப்படி தயாரித்து பயன்படுத்துவது? இதில் என்னென்ன பயன்கள் தெரிந்து கொள்வோம். முதலில் வெந்தயம், ஓமம், கருஞ்சீரகம் ஆகிய 3 பொருட்களையும் தனித்தனியாக ஒரு கடாயில் போட்டு சிறிது சூடாக்கவும். பிறகு இந்த 3 பொருட்களையும் கலந்து உலர வைக்கவும். அவை உலர்ந்த பிறகு அவற்றை பொடித்து காற்றுப்புகாத பாட்டிலில் சேமித்து வைக்கவும்.
இந்தப் பொடியுடன் சிறிதளவு இஞ்சித் தூளைக் கலந்து பருகலாம். தேவையென்றால் இந்தப் பொடியுடன் சிறிது சுக்குத் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து வைத்தும் கொள்ளலாம். தண்ணீருடன் தினமும் இரவு உணவுக்குப் பிறகு 1 கிளாஸ் வெந்நீரில் 1 ஸ்பூன் பொடியை கலந்து குடிக்கவும். குடித்த பிறகு எந்த உணவையும் எடுக்கக்கூடாது. மேலும் இரவில் குடிக்க முடியாதவர்கள் காலையில் வெதுவெதுப்பான நீரை குடிக்க வேண்டும். அல்லது சாப்பிட்ட பிறகு குடிக்கலாம். ஆனால் அதன் பிறகு வேறு எந்த உணவையும் எடுத்துக் கொள்ளக் கூடாது. இந்தப் பொடியை தயிருடன் சேர்த்தும் சாப்பிடலாம். மோர் அனைவராலும் விரும்பப்படும். குறிப்பாக கோடை காலத்தில் இந்த பொடியை மோரில் சேர்த்தால் உடல் எடை குறையும். இந்த பொடியை தினமும் குடித்து வந்தால் உடலில் உள்ள நச்சுக்கள் நீங்கும், உடலில் சேரும் நச்சுப் பொருட்கள் மலம், சிறுநீர், வியர்வை வழியாக வெளியேறும். தொடர்ந்து 40-50 நாட்களுக்கு உட்கொண்ட பிறகு சிறந்த பலன்களை பெறலாம். இதை 3 மாதங்கள் பயன்படுத்தினால் உங்கள் ஆரோக்கியம் மேம்படும். இந்த பொடியை பயன்படுத்திய பின் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் அனைத்தும் கரைந்து ரத்தம் சுத்தமாகும். உடலில் நல்ல இரத்த ஓட்டம் இருக்கும். சருமத்தில் உள்ள சுருக்கங்கள் இளமையாக மாறும். உடல் வலிமையாகவும், சுறுசுறுப்பாகவும், பொலிவாகவும் மாறும்.
தீராத இருமலால் அவதிப்படுபவர்கள் இதை தினமும் இரவில் குடித்து வந்தால் இருமல் நீங்கும். மூளை சுறுசுறுப்பாக இருக்கும். செவித்திறன் அதிகரிக்கிறது. தினசரி நடவடிக்கைகளில் சக்தியை வழங்குகிறது. சர்க்கரை கட்டுக்குள் வரும். பதினைந்து நாட்கள் இடைவெளியில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மீண்டும் குடிக்க ஆரம்பிக்கலாம்.
- பி. பாலாஜிகணேஷ்.