விசாகப்பட்டினம்: கோத்தப்பட்டினம் கடற்கரையில் 6 பேரின் சடலங்கள் கரை ஒதுங்கியது முரசு புயல் எச்சரிக்கையை அடுத்து படகை நிறுத்த ராமாயபட்டினம் துறைமுகம் சென்றபோது 9 பேர் மாயமாகியுள்ளனர். மீனவர்கள் மாயமானது குறித்து மீன்வளத்துறைக்கு புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என மீன்வளத்துறையை கண்டித்து காசிமேடு மீனவர்களின் உறவினர்கள் போராட்டம் நடத்தினர். தமிழ்நாடு மீனவளத்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என மீனவர்களின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து மீனவர்களை மீட்க கோரிக்கை விடுத்தும் அமைச்சர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று உறவினர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதனிடையே கோத்தப்பட்டினம் கடற்கரையில் 6 பேரின் சடலங்கள் கரை ஒதுங்கின. ஓங்கோல் அருகே புயலின்போது கவிழ்ந்தது தமிழ்நாட்டைச் சேர்ந்த படகு என ஆந்திர போலீஸ் உறுதி செய்தது. மேலும் 6 உடல்கள் கரை ஒதுங்கிய தகவல் அறிந்து காசிமேடு மீனவர்களின் உறவினர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். கோத்தப்பட்டினம் கடற்கரையில் ஒதுங்கிய சடலங்கள் சென்னையைச் சேர்ந்த மீனவர்களின் சடலங்கள் என மாவட்ட ஆட்சியர் பிரகாசம் தெரிவித்துள்ளார்.


