Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

புதிய BMW X1 லாங் வீல்பேஸ் இந்தியாவில் அறிமுகம்

இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான லக்ஸரி SUV இப்போது மேலும் பிரம்மாண்டமாக மற்றும் கம்பீரமாக! இந்த பிரிவிலேயே அதிக நீளமும், மிகவும் விசாலமான பின்பக்க இருக்கை வசதியையும் கொண்ட கார் இதுவாகும். BMW OS9 – ல் தி பெஸ்ட்-இன்-கிளாஸ் டிரைவிங் எக்ஸ்பீரியன்ஸ் - க்காக டிஜிட்டல் டெக் மற்றும் டிரைவிங் அசிஸ்டன்ஸ் சிஸ்டம்களில் புதிய மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அடாப்டிவ் LED ஹெட்லைட்ஸ், டிஜிட்டல் கீ பிளஸ், கம்ஃபர்ட் ஆக்சஸ் 2.0, வைட்ஸ்கிரீன் கர்வ்டு டிஸ்ப்ளே ஆகியவை இச்சிறப்பு அம்சங்களாகும். 156 hp ஆற்றலைஅளிக்கும் ஸ்போர்ட்டியான BMW ட்வின்பவர் டர்போ பெட்ரோல் இன்ஜின், 7-ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.

குருகிராம்: புதிய BMW X1 லாங் வீல்பேஸ் கார் இன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. நாட்டின் மிகவும் வெற்றிகரமான லக்ஸரி ஸ்போர்ட்ஸ் ஆக்டிவிட்டி வெஹிக்கிளாக BMW X1 புகழ்பெற்றிருக்கிறது. இப்போது லாங் வீல்பேஸ் என்ற புதிய அவதாரம் எடுத்திருக்கும் இந்த வெஹிக்கிள், அதிகரிக்கப்பட்ட செயல்திறன் மற்றும் பல டிஜிட்டல் மேம்பாடு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இந்தப் புதிய BMW X1 லாங் வீல்பேஸின் பெட்ரோல் வேரியண்ட், உள்நாட்டிலேயே சென்னையில் உள்ள BMW குரூப் பிளாண்ட்டில் தயாரிக்கப்படுகிறது. இந்த காருக்கான முன்பதிவுகளை இன்று முதல் BMW டீலர்ஷிப்களில் செய்யலாம்.

திரு. ஹர்தீப் சிங் பிரார், பிரசிடென்ட் மற்றும் CEO, BMW குரூப் இந்தியா கூறியதாவது: "BMW X1 இந்தியாவில் மிகச்சிறப்பான வெற்றி வரலாறைப் படைத்திருக்கிறது; மேலும் லக்ஸரி SUV செக்மென்ட்டில் இதன் தனிச்சிறப்பான ஆதிக்கம் தொடர்கிறது. புதிய BMW X1 லாங் வீல்பேஸ், அதிக இடவசதி, கூடுதல் சௌகரியம், அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் கம்பீரமான தோற்றம் என சக்திவாய்ந்த புதிய அம்சங்களுடன் இந்த தலைமைத்துவ நிலையை மேலும் வலுவாக்குகிறது. இந்த பிரிவில் மிக நீளமான, மிக உயரமான மற்றும் அகலமான கார் என்ற வகையில், இது உண்மையிலேயே விசாலமான இடம் மற்றும் சௌகரியமான பின்பக்க இருக்கை வசதிகளையும் வழங்குகிறது.

அதே நேரத்தில் BMW கார்களுக்கே உரிய கம்பீரம், செயல்திறன் மற்றும் டிரைவிங் செய்வதில் மகிழ்ச்சி ஆகிய தனித்துவ அம்சங்களை தொடர்ந்து இது தக்கவைத்துள்ளது. இந்த அறிமுகத்தின் மூலம், இந்த மாடலின் கவர்ச்சிகரமான தோற்றத்தை நாங்கள் மேம்படுத்தியிருப்பதற்கும் கூடுதலாக, இந்த வகையினத்தில் லக்ஸரி SUV பிரிவில் வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் தரத்தையும், சொகுசு வசதிகளையும் உயர்த்தியிருக்கிறோம்," என்றார்.

The introductory ex-showroom price of the new BMW X1 LWB is INR 49,90,000.

இன்வாய்ஸ் செய்யும்போது நடைமுறையில் உள்ள விலையே பொருந்தும். எக்ஸ்-ஷோரூம் விலை, பொருந்தக்கூடிய GST – ஐ உள்ளடக்கியது. ஆனால், ரோடு டேக்ஸ், டேக்ஸ் கலெக்டட் அட் சோர்ஸ் (TCS), RTO ஸ்டேச்சுடரி டேக்சஸ்/ஃபீஸ், பிற லோக்கல் டேக்ஸ் செஸ் லெவிஸ் மற்றும் இன்சூரன்ஸ் ஆகியவை இதில் அடங்காது. விலை / விருப்பத்தேர்வுகள் முன்னறிவிப்பின்றி மாற்றம் செய்யப்படுவதற்கு உட்பட்டவை. மேலும் தகவலுக்கு, ஆத்தரைஸ்டு BMW டீலரைத் தொடர்பு கொள்ளவும்.

புதிய BMW X1 லாங் வீல்பேஸின் சிறப்பம்சங்கள்.

சிறப்பான வடிவமைப்பு மற்றும் விசாலமான, மிக நேர்த்தியான இன்டீரியர்களுடன் வெளிவரும், புதிய BMW X1 லாங் வீல்பேஸ் அதன் வலுவான செயல்திறனைப் பிரதிபலிக்கிறது. இதன் நீளம் (4,616 mm), அகலம் (2,104 mm), உயரம் (1,641 mm) மற்றும் வீல்பேஸ் (2,800 mm) போன்ற பரிமாணங்கள், இதை அதன் பிரிவில் மிக நீளமான காராக மட்டுமல்லாமல், இந்தியாவில் கிடைக்கும் மிகவும் விசாலமான 5-சீட்டர் SUV - க்களில் ஒன்றாகவும் ஆக்குகிறது.

சிக்னேச்சர் BMW கிட்னி கிரில் மற்றும் இப்பிரிவில் யுனிக் அடாப்டிவ் LED ஹெட்லைட்டுகள் ஆகியவையால் இதன் நேர்த்தியான முன்புறம் மிகவும் கவர்ச்சியான தோற்றத்தைக் கொண்டிருக்கிறது. இதில் உள்ள இன்டலிஜென்ட் BMW ஹை பீம் அசிஸ்டென்ட் அமைப்பு, இரவில் எதிரே வரும் வாகன ஓட்டிகளின் பார்வையை கூசச் செய்யாமல் பாதுகாக்கிறது. அலுமினியம் சாடினேட்டட் ரூஃப் ரெயில்களுடன் கூடிய வீல் ஆர்ச் காண்டூர்ஸ் மற்றும் சதுர வடிவ வீல் ஆர்ச் கான்டூர்ஸ் மற்றும் டியூப்லெஸ் டயர்களைக் கொண்ட 18 இன்ச் M லைட் அலாய் வீல்ஸ் காரின் ஒட்டுமொத்த தோற்றத்திற்கு மேலும் மெருகூட்டுகின்றன.

உட்புறத்தில், மிகப்பெரிய இடவசதியுடன் நவீன வடிவமைப்பும், ப்ரீமியம் கைவினைத்திறனும் மற்றும் புதுமையான செயல்திறனும் ஒன்றிணைவது இதன் சிறப்பம்சமாகும். ஓட்டுநர் மற்றும் முன் இருக்கைப் பயணி இருவருக்கும் மல்ட்டி வே எலக்ட்ரிகலி அட்ஜஸ்டபிள் ஸ்போர்ட் சீட்கள் இடம்பெற்றுள்ளன. அதிகரிக்கப்பட்டுள்ள வீல்பேஸ் (+108 mm) காரணமாக பின்பக்கப் பயணிகளுக்கு இது உண்மையிலேயே சிறப்பான சௌகரியமாக இருக்கும். வசதியான லெக்ரூம் (+150 mm) மற்றும் சிறப்பான நீரூம் (முழங்காலுக்கான சிறப்பான இடவசதி) (+109 mm) ஆகியவற்றின் மூலம் இந்த பிரிவிலேயே மிகவும் விசாலமான ரியர் கேபின் வசதி பின்புற பயணிகளுக்கு கிடைக்கும். கூடுதல் குஷனிங் (+15 mm) மற்றும் சிறந்த கான்டர்டு இருக்கைகள், பயண தூரம் எவ்வளவு நீண்டதாக இருந்தாலும், சொகுசான வசதியை உறுதி செய்யும்.

ஓட்டுநரை நோக்கிச் சாய்ந்திருக்கும் சீம்லெஸ் கிளாஸ் சர்ஃபேஸைக் கொண்ட வைட்ஸ்கிரீன் கர்வ்டு டிஸ்ப்ளே, கேபினுக்கு உயர்தர டிஜிட்டல் நேர்த்தியை வழங்குகிறது. 'அலுமினியம் மெஷ் எஃபெக்ட்' ட்ரிம் கொண்ட நேர்த்தியான டேஷ்போர்டு, லக்ஸரி இன்ஸ்ட்ரூமென்ட் பேனலுடன் அழகாக இணைகிறது. ஸ்டோரேஜ் வசதியுடன் கூடிய ஃபுளோட்டிங் ஆர்ம்ரெஸ்ட் கண்ட்ரோல் கிளஸ்டரை மிகச் சரியாக ஒருங்கிணைக்கிறது. இந்தப் பிரிவில் வழங்கப்படும் மற்றொரு பிரீமியம் அம்சமாக, 12 லவ்டுஸ்பீக்கர்கள் மற்றும் 205W அவுட்புட் கொண்ட ஹர்மன் கார்டன் சவுண்டு சிஸ்டம் நேரடி இசைநிகழ்ச்சியை ரசிக்கின்ற அனுபவத்தை வழங்குகிறது. 9 சதுர அடி பரப்பளவைக் கொண்ட பனோரமா சன்ரூஃப் இந்த பிரிவிலேயே மிகப்பெரியதாகும். இது கேபினை இயற்கை ஒளி மற்றும் விசாலமான வசதி உணர்வை வழங்குகிறது.

புதிய BMW X1 லாங் வீல்பேஸ் - நைட் டஸ்க் ப்ளூ, ஸ்கைஸ்கிராப்பர் கிரே, கார்பன் பிளாக் மற்றும் மினரல் ஒயிட் . இவற்றை காஸ்டேனியா அல்லது டியூவல் டோன் ஸ்மோக் ஒயிட்/கிரே என்ற நான்கு கவர்ச்சிகரமான வண்ணங்களில் கிடைக்கிறது ஆகிய விருப்பத் தேர்வுகளில் வெகன்ஸா பெர்ஃபரேட்டட் அப்ஹோல்ஸ்டரியுடன் பொருத்திக்கொள்ளலாம். BMW ட்வின்பவர் டர்போ டெக்னாலஜி கொண்ட பெட்ரோல் இன்ஜின், அதிகபட்ச சக்தியையும் முன்மாதிரியான எரிபொருள் திறனையும் ஒருங்கிணைத்து குறைவான இன்ஜின் ஸ்பீடில் கூட சிறந்த செயல்பாட்டை வழங்குகிறது. இதன் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் 115 kW / 156 hp என்ற மேம்பட்ட சக்தியையும், 1,500 – 4,600 rpm-ல் 230 Nm அதிகபட்ச டார்க் திறனையும் உருவாக்குகிறது.

ஃப்ரண்ட் வீல் டிரைவ், டபுள் கிளட்ச் டெக்னாலஜியுடன் கூடிய 7-ஸ்பீடு ஸ்டெப்ட்ரானிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் 50:50 எடைப் பகிர்வு ஆகியவை இணைந்து, அதிக நிலைத்தன்மையுடன் கூடிய நெகிழ்வுத்திறனுடன் கையாளும் வசதியை வழங்குகின்றன. புதிய BMW X1 லாங் வீல்பேஸ், குரல் மற்றும் தொடு உணர் கட்டுப்பாட்டின் மூலம் எளிதான அணுகலை வழங்கும் BMW iDrive-ன் சமீபத்திய பதிப்புடன் வருகிறது. இது சமீபத்திய BMW ஆப்பரேட்டிங் சிஸ்டம் 9-ஐ அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.

MyBMW ஆப், அனைத்து நேரங்களிலும் வாகனத்தின் நிலைமைகளை கவனமுடன் கண்காணிக்கிறது. NFC கார்டுக்கும் கூடுதலாக. BMW டிஜிட்டல் கீ பிளஸ் மற்றும் கம்ஃபர்ட் ஆக்சஸ் அமைப்புடன் இணைந்து, ஸ்மார்ட்போன் அல்லது ஸ்மார்ட்வாட்ச்சை வாகனத்தின் சாவியாக மாற்றுவதன் மூலம் இதுவரை கிடைத்திடாத புதிய வசதியை வழங்குகிறது.

வாகனத்தை நிறுத்தும் போது பாதுகாப்பையும் சௌகரியத்தையும் அதிகரிக்கும் வகையில் ஓட்டுநருக்குச் சிறப்பான உதவி கிடைக்கிறது. ரியர் வியூ கேமரா, முன்புறம் மற்றும் பின்புறத்தில் உள்ள ஆக்டிவ் பார்க் டிஸ்டன்ஸ் கன்ட்ரோல் சென்சார்கள் வழியாக பார்க்கிங் அசிஸ்டென்ட் போன்ற ஸ்டான்டர்டு செயல்பாடுகள் இவ்வாகனத்தில் இடம்பெற்றுள்ளன. 360 சரவுண்டு வியூ கொண்ட பார்க்கிங் அசிஸ்டென்ட் பிளஸ், நெருக்கடியான, இடவசதி குறைவான இடங்களில் வாகனத்தைப் பார்க்கிங் செய்வதை எளிதாக்குகிறது.