Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பிஎம்டபிள்யூ எம் 1000 ஆர்

பிஎம்டபிள்யூ நிறுவனம் புதிய மேம்படுத்தப்பட்ட எம் 1000 ஆர் மோட்டார் சைக்கிளை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக் முழுமையாக வெளிநாட்டில் வடிவமைக்கப்பட்டு இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படும் என நிறுவன தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்1000 ஆர்ஆர் அடிப்படையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 999 சிசி வாட்டர் கூல்டு இன்லைன் 4 சிலிண்டர் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 13,750 ஆர்பிஎம்மில் 210 எச்பி பவரையும், 11,000 ஆர்பிஎம்மில் 113 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 100 கிலோ மீட்டர் வேகத்தை 3.2 நொடிகளில் எட்டும். அதிகபட்சமாக மணிக்கு 280 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லும். ஷோரூம் விலை சுமார் ரூ.33.5 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டுகாட்டி ஸ்டிரீட் பைட்டர் வி4 எஸ் மோட்டார் சைக்கிளை விட இது சுமார் ரூ.1.12 லட்சம் அதிகம்.