விஎஸ் நிறுவனம் பிஎம்டபிள்யூ எப்450 ஜிஎஸ் மோட்டார் சைக்கிள் உற்பத்தியை துவங்கியுள்ளது. டிவிஎஸ் நிறுவனமும் பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் நிறுவனமும் 2013ல் ஒப்பந்தம் செய்தன. இதன்பிறகு 2 லட்சம் பைக்குகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் டிவிஎஸ் நிறுவனத்தின் ஓசூர் ஆலையில் பிஎம்டபிள்யூ எப் 450 ஜிஎஸ் பைக் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த பைக்கின் உற்பத்தி தற்போது துவங்கியுள்ளதாக டிவிஎஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த பைக் இந்த ஆண்டு நடந்த மிலன் மோட்டார் வாகன கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இதில் 420 சிசி பேரரல் டிவின் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 8,750 ஆர்பிஎம்-ல் 48 எச்பி பவரையும், 6,750 ஆர்பிஎம்-ல் 43 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இந்தியாவில் இந்த பைக் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்ற அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
+
Advertisement


