தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புளூ ஸ்பாரோ ஏவுகணை வீசி கமேனியை இஸ்ரேல் கொன்றது எப்படி? பரபரப்பு தகவல்கள்

துபாய்: ஈரான் தலைவர் கமேனியை கொல்ல புளூ ஸ்பாரோ என்ற அதி நவீன ஏவுகணையை இஸ்ரேல் பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது கடந்த 28ம் தேதி முதல் ராணுவ தாக்குதலை நடத்தி வருகின்றன. இந்த தாக்குதலில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக ஈரானை ஆண்டு வந்த கமேனி படுகொலை செய்யப்பட்டார்.

Advertisement

ஈரானின் உச்ச தலைவர் கமேனியின் கொன்றது எப்படி என்பது தொடர்பான வீடியோவை இஸ்ரேல் நேற்று வெளியிட்டது. அதன்படி,டெஹ்ரானில் கமேனியைக் கொல்ல இஸ்ரேல் ப்ளூ ஸ்பாரோ என்ற ஏவுகணையைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. பிப்ரவரி 28ம் தேதி கமேனி, அவரது அலுவலகம் அமைந்துள்ள டெஹ்ரானில் உள்ள பாஸ்டியர் சாலைக்கு வந்துள்ளார். அங்குதான் உயர்நிலைக் கூட்டம் நடந்தது.

அந்த கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார் என தகவல் கிடைத்ததும் ஏவுகணைகள் வீசப்பட்டன. இதில் கமேனி கொல்லப்பட்டார். அவருடன் அவரது குடும்பத்தினர், உயர் அதிகாரிகளும் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு புளூ ஸ்பாரோ என்ற ஏவுகணையை இஸ்ரேல் பயன்படுத்தியுள்ளது.புளூ ஸ்பாரோ 6.51 மீட்டர் நீளம் மற்றும் 1,900 கிலோ எடை கொண்டது.

பாதுகாப்பான தூரத்திலிருந்து இதை ஏவ முடியும். மேலும் ஜிபிஎஸ் சிக்னல்கள் தடை செய்யப்படும் சூழல்களில்கூட, அசாதாரண துல்லியத்துடன் அதன் இலக்கைத் தாக்க முடியும். இதைவைத்தே கமேனியின் இருப்பிடத்தைத் தெரிந்துகொண்டு இஸ்ரேல் பயங்கரமான இந்த தாக்குதலை நடத்தியுள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது.

பதுங்கு குழி அழிப்பு:

இதற்கிடையே, ஈரானின் உச்ச தலைவர் கமேனி சில சமயங்களில் பயன்படுத்திய பதுங்கு குழியை இஸ்ரேல் விமானங்கள் தாக்கி அழித்துள்ளன.. இந்த பகுங்கு குழியில் அமர்ந்து கொண்டு போர் நடவடிக்கைகளை கமேனி கவனிப்பார்.கமேனியின் இறப்புக்கு பின் அந்த வளாகம் ஈரானிய மூத்த அதிகாரிகளுக்கான தளமாக செயல்பட்டது. 50 ஜெட் விமானங்கள் பதுங்கு குழி மீது குண்டுகளை வீசி அழித்தன என்று கூறப்படுகிறது.

Advertisement

Related News