தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கருப்புக்கவுனி... கொட்டார சம்பா...பாரம்பரிய நெற்பயிர்களைப் பயிரிடும் எம்சிஏ பட்டதாரி!

‘‘நமது பாரம்பரிய நெல் வகைகள், காய்கறிகளை விளைவிக்கணுங்கிறதுக்காகத்தான் விவசாயத்துக்கே வந்தேன்” என பேசத்தொடங்கினார் திருச்சி மாவட்டம், மணப்பாறையைச் சேர்ந்த கனகவேல். மணப்பாறை அருகில் உள்ள கே.வலையப்பட்டி என்ற கிராமத்தில் 4 ஏக்கரில் விவசாயம் செய்து வரும் கனகவேல் எம்சிஏ படித்துவிட்டு, 10 ஆண்டுகள் மென்பொருள் துறையில் பணியாற்றியவர். கடந்த 3 ஆண்டுகளாக இயற்கை வேளாண்மையில் ஈடுபட்டு வருகிறார். இந்தப் பட்டத்தில் பாரம்பரிய நெல் ரகங்களான கருப்புக்கவுனி, கொட்டாரசம்பா ஆகியவற்றை பயிர் செய்கிறார். மழைத்தூறல் வயலை நனைத்துக்கொண்டிருந்த ஒரு காலை வேளையில் கனகவேலைச் சந்தித்தோம். தனது விவசாயம், அனுபவம் குறித்து நம்மிடையே தொடர்ந்து உரையாடினார்.

Advertisement

“கடந்த சீசனோட அறுவடை முடிஞ்சி தக்கப்பூண்டு போட்டு, மடக்கி உழுதோம். அப்புறமா கருப்புக்கவுனியும், கொட்டார சம்பாவும் நட்டோம். ஒற்றை நாற்று முறையிலதான் நடவு நட்டோம். கயிறு புடிச்சி நேர்கோட்டுல சரியான இடைவெளி விட்டு நடுற ஒற்றை நாற்று முறை ரொம்ப நல்லது. வழக்கமான நடவு முறையில ஒரே குத்துல 4 நாத்து வச்சிடுவாங்க. அது வளரும்போது சத்தும், இடமும் பத்தாம விளைச்சல் குறையும். வழக்கமான முறையில நடவு பண்ணா, ஒன்னரை ஏக்கருக்கு 4000 முடி நடுவாங்க. 10 முடின்றது ஒரு கட்டு. நான் ஒன்றரை ஏக்கருக்கு 285 முடியிலயே நட்டேன். ஒன்னரை ஏக்கருக்கு 10 கிலோ விதை நெல்தான் தேவைப்பட்டது. அதுவே ஒரு அடிக்கு ரெண்டு அடி இடைவெளி விட்டு ஒற்றை நாற்று முறையில நடவு செய்யும்போது தூர்பிடிச்சி வளர தேவையான இடம் கிடைக்கும். ஒவ்வொரு நாத்துக்கும் நல்ல சத்தும், வெளிச்சமும் கிடைக்கும். நெல் நல்லா வளரும். அதனால ஒற்றை நாற்று நடவு முறைல நல்ல மகசூல் வரும்” என்றவர், விதைநெல்லைத் தேர்ந்தெடுத்து பதப்படுத்தும் முறை குறித்து விளக்கினார்.

“முதல்ல நம்மகிட்ட இருக்குற விதைநெல்லை நல்லா காய வச்சிக்கணும். காய வச்சிட்டு உப்புத்தண்ணியில 10 கிலோ விதைநெல்லுக்கு, 2 கிலோ உப்பை தண்ணியில கரைச்சி, அந்த உப்புத் தண்ணியில நெல்லை 3 அலசு அலசிக்கணும். அப்புறம் கேணித்தண்ணி இல்லன்னா போர்வெல் தண்ணியில 2 அலசு அலசிடனும். இதனால பதர்லாம் தன்னால தண்ணியில போய்டும். அதுக்கப்புறம் இந்த விதைநெல்லை சாக்குல (கோணி சாக்கு) போட்டு தண்ணிக்குள்ள வைக்கணும். மூட்டை இடுப்பளவு தண்ணிக்குள்ள ஒருநாள் ஊற வச்சிட்டு நடணும். அப்புறம் நெல்லைப் பாவிட்டு (தூவிவிட்டு), 21ம் நாள் நாற்றை பிரிச்சி நடணும். நாத்து நட்டதுலர்ந்து 21வது நாள் களை எடுத்துட்டு அப்புறம் மீன் அமிலம் அடிச்சிட்டேன். இதுக்கு நடுவுல பால் புடிக்கறதுக்கு முன்னாடி ஸ்டேஜ்ல கொஞ்சமா டல்லா இருந்தது. பசுமை குறைந்து பச்சை கலருக்கு பதிலா லேசான மஞ்சள் கலர்ல இருந்தது. அப்போ 70ம் நாள்ல மீன் அமிலம் இன்னொரு தடவை குடுத்தோம். வேலையும் செலவும் அவ்ளோதான். அதோட நேரடியா அறுவடைதான்’’ என்றவரிடம், பாரம்பரிய நெற்பயிர்களின் பராமரிப்பு முறை குறித்து கேட்டோம்.

“நடவுக்குப் பிறகு, 21ம் நாள் களையெடுத்தோம். போன வருஷம் கையிலயேதான் களை எடுத்தேன். இந்த வருஷம் ஆள் பற்றாக்குறையால கோனோவீடர் வச்சி களை எடுத்தேன். களை எடுத்தப்புறம் ஊட்டத்துக்கு மீன் அமிலம் மட்டும் ஸ்ப்ரே பண்ணோம். மீன் அமிலம் நாங்களே ரெடி பண்றோம். மீன் கழிவையும் வெல்லத்தையும் கலந்து 30 நாள் ஊறவச்சி, அதுக்கப்புறம் கரைசலை மட்டும் வடிகட்டி எடுத்துக்கணும். 10 லிட்டர் தண்ணிக்கு 35 மில்லி லிட்டர் மீன் அமிலம் கலந்து தெளிக்கணும். நெல் ரொம்ப டல்லா இருக்குன்னா, 10 லிட்டருக்கு 50 மில்லி கலக்கலாம். மீன் அமிலம் உரமாகவும் செயல்படும், பூச்சிக்கொல்லியாவும் செயல்படும். அது மட்டுந்தான் அடிச்சேன். 2024 சித்திரை பட்டத்துல கருப்புக்கவுனி நட்டோம். நட்ட தேதியில் இருந்து 15 நாளைக்கு நல்ல மழை. நாத்து அழுகிருச்சின்னு வேற நாத்து நடுங்கன்னு எல்லாரும் சொன்னாங்க.

ஆனா, என்ன நடக்குதுன்னு பாக்குறதுக்காக விட்டோம். கொஞ்ச நாள்ல அதுவே துளிர்விட்டு வந்துடிச்சி. அது ஏக்கருக்கு 25 மூட்டை விளஞ்சது. மகசூலாக கிடைச்ச கருப்புக்கவுனி நெல்லை ரைஸ்மில்லில் கொடுத்து உமியை மட்டும் நீக்கிட்ட அரிசியாக்கி வித்தேன். வேணும்னு கேக்குறவங்களுக்கு கிலோ 200 ரூபாய்க்கு குடுத்தேன். நாமளே அரைச்சி வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக வித்ததால லாபம் கிடைச்சது. நெல் அரைக்க கொடுத்த மில்லில் நெல்லின் தரம் நன்றாக இருந்ததைப் பார்த்து, அந்த மில்காரர்களே கரூர் இயற்கை விவசாயிகள் சங்கத்துல ஒருத்தர்கிட்ட என்னைப் பத்தி சொன்னாங்க. அந்த நபர் என்னிடம் விதை நெல் கேட்டதால 5 மூட்டை விதை நெல்லை அவருக்கு கொடுத்தேன். நெல் நன்றாக இருந்ததால் கரூர் இயற்கை விவசாயிகள் சங்கம் சார்பில் 2025ம் ஆண்டு நடந்த இயற்கை வேளாண் திருவிழாவில் அமைச்சர் செந்தில் பாலாஜி கையால “இயற்கை விவசாயி சிறப்பு விருது” கிடைச்சது.

கருப்புக்கவுனிக்கு அடுத்து எந்த வகையான நெல்லை பயிரிடலாம்னு யோசனையில் இருந்தேன். அப்போ முழங்கால் வலி, மூட்டுவலி, நரம்பு தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு கொடுக்குற கொட்டார சம்பா ரகத்தைப் பத்தி கேள்விப்பட்டதால, அதை நடவு செய்ய ஆரம்பிச்சேன். இப்போ கொட்டாரசம்பா ஒன்னரை ஏக்கர்லயும், கருப்புக்கவுனி ஒன்னரை ஏக்கர்லயும் இருக்கு. கொட்டார சம்பா 6 அடி உயரம் வளந்திருக்கு. கருப்புக்கவுனி நாலரை அடி உயரம் வளந்திருக்கு. அடுத்ததா தில்லைநாயகம்ன்ற ரகம் போடப்போறேன். இது கீழடி ஆராய்ச்சியில கூட கிடைச்சிருக்கு” என்ற சுவாரஸ்ய தகவலைத் தந்த கனகவேல், நெல்லுக்கு அடுத்தபடியாக காய்கறி விதைகளையும், நாற்றுகளையும் உற்பத்தி செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து கூறுகையில், ``காய்கறி நாத்து பண்ணை இப்பதான் 2 மாசமா ஆரம்பிச்சிருக்கேன். தக்காளி, மிளகாய், கத்தரின்னு காய்கறி விதைகளை கேக்கறவங்களுக்காக இதை ஆரம்பிச்சிருக்கேன். நெல்லில் இருந்து சீசனுக்கு சீசன் வருமானம் கிடைக்கும். அன்றாட வருமானத்துக்காக இந்த நாத்து பண்ணையை ஆரம்பிச்சிருக்கேன்” என தீர்க்கமாக பேசுகிறார்.

தொடர்புக்கு:

ப.கனகவேல்: 98653 32211.

 

Advertisement