தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மகாராஷ்டிரா, பீகாரை தொடர்ந்து அதிமுகவை விழுங்கும் ஆக்டோபஸ் பாஜக: முத்தரசன் பேட்டி

 

Advertisement

விருதுநகர்: அதிமுகவை விழுங்கும் ஆக்டோபஸாக பாஜக மாறி வருகிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் முத்தரசன் தெரித்துள்ளார். விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பில் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் முத்தரசன் நிருபர்களிடம் கூறியதாவது: ஒன்றிய அரசு மகளிர் தினத்தில் சமையல் காஸ் சிலிண்டர் விலையை உயர்த்தி பெண்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது கண்டிக்கத்தக்கது. சிறுபான்மையின மக்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. வரும் தமிழக சட்டமன்ற தேர்தல் ஒரு அரசியல் போராட்டமாகும். ஒன்றிய அரசால் தமிழகம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. அமெரிக்க அரசுக்கு அடிமை போல் மத்திய அரசு செயல்படுவது அதிர்ச்சி அளிக்கிறது.

எடப்பாடி தன்னை காப்பாற்றிக் கொள்ள அதிமுகவை பாஜகவிடம் அடகு வைத்துவிட்டார். பாஜக என்பது ஆக்டோபஸ் போன்றது. கூட்டணியில் சேரும் கட்சிகளை அபகரிக்கும் வேலையை தொடர்ந்து செய்து வருகிறது. மகாராஷ்டிரா, பீகாரை தொடர்ந்து தமிழகத்தில் அதிமுகவை விழுங்கும் ஆக்டோபஸாக பாஜக மாறி வருகிறது. திமுக தலைமையிலான கூட்டணி 10 ஆண்டுகளாக தொடர கொள்கையே காரணம். இந்த கூட்டணி மேலும் பலப்பட்டு வருகிறது. 22 கட்சிகள் கூட்டணியில் உள்ளன. திமுக கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் எந்த இழுபறியும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

 

Advertisement