Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இந்தியாவிலேயே பாஜகவின் முரட்டு அடிமை எடப்பாடி பழனிசாமிதான்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் காட்டம்

விருதுநகர்: இந்தியாவிலேயே பாஜகவின் முரட்டு அடிமை எடப்பாடி பழனிசாமிதான் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற தென் மண்டலக் கழக இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் கல்லுக்குறிச்சி கலைஞர் திடலில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் தென் மண்டலத்திற்கு உட்பட்ட 20 கழக மாவட்டங்கள் மற்றும் 58 சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த 1 லட்சம் இளைஞர் அணி நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தில் உரையாற்றிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்; திருவண்ணாமலையில் நடந்த இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு மாநாட்டை இந்தியாவே திரும்பிப் பார்த்தது.

திமுகவுக்காக உழைத்த ஏராளமான செயல் வீரர்களை கொடுத்த மாவட்டம் விருதுநகர்; திருவண்ணாமலையில் நடந்த மாநாட்டை மிஞ்சும் வகையில் விருதுநகர் மாநாடு அமைந்துள்ளது. ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து போராடிய மருது சகோதரர்களை தந்த மண் விருதுநகர்; காமராசர், சங்கரலிங்கனார் உள்ளிட்ட தலைவர்களை தந்த மண் விருதுநகர் மாவட்டம். ஒரு கட்சியின் கிளை அமைப்பில் 50 லட்சம் உறுப்பினர்கள், 5 லட்சம் நிர்வாகிகள் கொண்ட இயக்கம் திமுகதான். பூத் வரைக்கும் வலுவான அமைப்பு கொண்டது திமுக இளைஞரணி. எந்த அமைப்பு பலமும், கொள்கையும் இல்லாமல் வெற்றுக் கூச்சல் போடும் கூட்டத்தால் எந்த பயனும் இல்லை.

தமிழ்நாடு 11.19% பொருளாதார வளர்ச்சி பெற்றுள்ள நிலையில் உத்தரப் பிரதேசம் இன்னும் 6% கூட எட்டவில்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மக்களின் ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தேர்தல் வர உள்ளதால் பிரதமர் மோடி அடிக்கடி தமிழ்நாடு வருவார்; திருக்குறளும் கூறுவார். எப்போதும் மக்களோடு மக்களாக களத்தில் நிற்கும் தலைவர்தான் முதலமைச்சர் ஸ்டாலின். தமிழ்நாடு அடைந்த வளர்ச்சியில் பாதியை கூட டபுள் என்ஜின் ஆட்சி உள்ள மாநிலங்கள் தொடவில்லை. தேர்தல் திருவிழா என்பதால் தமிழ்நாட்டில் புதுப் புது கடைகளை போட ஆரம்பித்துள்ளார்கள்.

திருவிழா முடிந்ததும் கடைகளை எடுத்துவிடுவார்கள்; ஆனால் திமுகதான் என்றைக்குமே மக்களோடு நிற்கும். திராவிட முன்னேற்றக் கழகம்தான் எப்போது மக்களோடு மக்களாக இருக்கும். பாஜகவின் மிரட்டலுக்கு எல்லாம் அடிமை அதிமுக பயப்படலாம்; மு.க.ஸ்டாலினின் திமுக பயப்படாது. வழக்குகளை வைத்து மிரட்டினால் அதிமுக பயப்படலாம்; மு.க.ஸ்டாலினின் திமுக பயப்படாது. இந்தியாவிலேயே பாஜகவின் முரட்டு அடிமை எடப்பாடி பழனிசாமிதான். பாஜகவின் கிளை அமைப்பாக அதிமுக மாறிவிட்டது. பாசிச சக்திகளிடம் இருந்து தமிழ்நாட்டை காப்பாற்ற இளைஞரணி எப்போதும் இருக்கும்.

பத்து தோல்வி பழனிசாமி, மொத்த தோல்வி மோடி; சட்டமன்ற தேர்தலில் இளைஞர்களுக்கு அதிகளவில் வாய்ப்பு கொடுக்க வேண்டும். 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும். முதல்வர் கண் அசைத்தால் மட்டும் போதும், அவர் சொல்வதை இளைஞரணி செய்து முடிக்கும் என்று கூறினார்.