Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

மகாராஷ்டிராவில் 2கோடி வாக்காளர்கள் நீக்கம்; பாஜவும், வாக்கு திருடும் ஆணையமும் உத்திகளை தொடர்ந்து மாற்றி வருகின்றன: ராகுல்காந்தி சாடல்

புதுடெல்லி: மகாராஷ்டிராவில் 2.06கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ள நிலையில் பாஜவும், வாக்கு திருடும் ஆணையமும் தங்களது உத்திகளை மாற்றி வருவதாக என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி விமர்சித்துள்ளார். மகாராஷ்டிராவில் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு பிறகு வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து 2.06கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இது குறித்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தனது எக்ஸ் தள பதிவில்,‘‘வாக்கு திருட்டு மூலம் அமைக்கப்பட்ட ஒரு அரசிற்கு மக்கள் முக்கியமில்லை.

அதனால் தான் பாஜ மக்களின் பேச்சை கேட்பதோ அல்லது அவர்களின் கட்டளையை ஏற்று நடப்பதோ இல்லை. பாஜவும் வாக்குதிருடும் ஆணையமும் தங்களது உத்திகளை தொடர்ந்து மாற்றிக்கொண்டே இருக்கின்றன. இனியும் அவ்வாறே செய்யும். அவர்களின் ஒரே நோக்கம் எப்படியாவது பாஜவின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும் மற்றும் இந்தியாவின் ஜனநாயகம் முடிவுக்கு வர வேண்டும் என்பது தான். அவர்கள் இத்தகைய நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடுவார்கள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.