Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

எந்த பிரச்னையானாலும் பாஜவைத்தான் அதிமுக நாடுது... தவெக கட்சியாகவே இல்ல ரசிகர் மன்றம் போலவே செயல்படுது... கலாய்க்கும் கார்த்தி சிதம்பரம்

தஞ்சை: தஞ்சையில் நேற்று கார்த்தி சிதம்பரம் எம்பி அளித்த பேட்டி: அதிமுகவில் முன்பு இருந்த ஆளுமை இல்லை. அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்றால் அவர்களை நாடித்தான் எல்லா அரசியல் கட்சிகளும் வந்து சந்தித்து கூட்டணி அமைத்தன. ஆனால் இன்று அவர்கள் ஒரு முடிவெடுக்க முடியாத நிலையில் உள்ளனர். கட்சிக்குள் எந்த பிரச்னையாக இருந்தாலும் பாஜவை நாட வேண்டிய நிலையில் அதிமுக உள்ளது. இதனை தமிழக மக்கள் நன்றாக உணர்ந்துள்ளனர்.

தவெக முழுமையான அரசியல் கட்சி என்பதை ஏற்க முடியாது. அது ஒரு ரசிகர் மன்றம் போலதான் நடக்கிறது. விஜய் ஒரு பெரிய நடிகர். அவருக்கு ரசிகர் கூட்டம் உள்ளது. அவை ஓட்டுகளாக மாறுமா என்பது கேள்விக்குறிதான். ஓபிஎஸ், திமுகவில் இணைந்தது முதல்வர் ஸ்டாலினின் சாதுர்யம். ஆளும்கட்சியாக இருக்கும்போது ஏற்படும் எதிர்ப்புகளை எதிர்கொள்ள ஒரு பெரிய கூட்டணி தேவையாக இருக்கும். அதை ஸ்டாலின் ரொம்ப சாதுர்யமாகவும், தன்னை விமர்சனம் செய்தவர்களை கூட பெரிய மனதுடன், அரவணைத்து ஒரு பெரிய கூட்டணியை அமைத்துள்ளது அவருக்கு கிடைத்த வெற்றி.

234 தொகுதிகள் தான் உள்ளது. நிறைய கட்சிகள் கூட்டணியில் உள்ளார்கள். எனவே ‘கிவ் அண்ட் டேக் பாலிசி’யில் ஒரு புரிதல் வரும் என நம்புறேன். அமெரிக்கா இன்னொரு நாடு மீது போர் தொடுப்பதை ஏற்கமுடியவில்லை. ஏகாதிபத்திய மனப்பான்மையை வன்மையாக கண்டிக்கிறேன். சசிகலாவால் பெரிய தாக்கம் இருக்காது.