Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

2 நாள் பயணமாக 25ம் தேதி பாஜ தேசிய தலைவர் நிதின் நபின் தமிழகம் வருகை: கோவை, திருநெல்வேலியில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை

சென்னை: பாஜ தேசிய தலைவர் நிதின் நபின் 2 நாள் பயணமாக வரும் 25ம் தேதி தமிழகம் வர உள்ளார்.

பாஜ தேசிய தேசிய தலைவராக நியமிக்கப்பட்ட நிதின் நபின் ஒவ்வொரு மாநிலமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாஜவை வலுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார். அவர் தலைவராக பொறுப்பேற்ற பின்னர் இதுவரை தமிழகம் வரவில்லை. தமிழக பாஜ நிர்வாகிகளுடன் காணொலி காட்சி வாயிலாக மட்டுமே கலந்துரையாடினார். அந்த கலந்துரையாடலின் போது விரைவில் தமிழகம் வருவதாக உறுதியளித்து இருந்தார்.

அதன்படி 2 நாள் பயணமாக வருகிற 25ம் தேதி நிதின் நபின் தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம் வரும் அவர் கோவை, திருநெல்வேலி ஆகிய 2 மாவட்டங்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளார். தனது பயணத்தின் போது, ​​கட்சியின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் சந்திப்புகளை ஏற்பாடு செய்யுமாறு மாநில தலைமைக்கு அவர் அறிவுறுத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம் வரும் நிதின் நபின் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசிக்க உள்ளார்.

கடந்த பல்வேறு தேர்தல்களில் பாஜ வாக்கு சதவீதம் குறைந்தது, தொடர் தோல்விகளையும் சந்தித்து வருகிறது. இது தொண்டர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அது மட்டுமல்லாமல் பாஜவின் பல முக்கிய நிர்வாகிகள் பாஜவில் இருந்து விலகி வருகின்றனர். அண்ணாமலை போன்றவர்கள் புதிய இயக்கத்தை தொடங்கியுள்ளனர். இதுபோன்ற சூழ்நிலையில் தமிழக பாஜவை வலுப்படுத்துவது, அடுத்தக்கட்ட தேர்தலுக்கு தயார்படுத்த டெல்லி மேலிடம் முடிவு எடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தமிழகம் வரும் தேசிய தலைவர் நிதின் நபின் கட்சியினருடன் பல்வேறு முக்கிய ஆலோசனையில் ஈடுபட உள்ளார். இதன் ஒரு பகுதியாக திருநெல்வேலியில் நிதின் நபின் பங்கேற்கும் வகையில் பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.