Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

7 மாநிலங்களில் இடைத்தேர்தல் : 2 தொகுதிகளில் பாஜக, 2 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை

டெல்லி: 7 மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான ஓட்டுக்களை எண்ணும் பணி நடந்து வருகிறது. 2 தொகுதிகளில் பாஜவும், 2 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 2 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளன. ஜம்மு-காஷ்மீரில் உள்ள பட்கம் மற்றும் நக்ரோட்டா, ராஜஸ்தானில் உள்ள அந்தா, மிசோரமில் உள்ள டம்பா, ஜார்க்கண்டில் உள்ள காட்ஷிலா, தெலுங்கானாவில் உள்ள ஜூபிலி ஹில்ஸ், ஒடிசாவில் நவ்படா மற்றும் பஞ்சாபில் உள்ள தரன் தரன் ஆகிய 8 சட்டசபை தொகுதிகளுக்கும் நவ., 11ம் தேதி தேர்தல் நடந்தது.

தேர்தலில் பதிவான ஓட்டுகளை எண்ணும் பணி இன்று (நவம்பர் 13) காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தற்போது 10.30 நிலவரம் பின்வருமாறு:

2 தொகுதிகளில் பாஜ முன்னிலை

நக்ரோட்டா தொகுதி (ஜம்மு காஷ்மீர்); பாஜ வேட்பாளர் தேவயானி ரானா முன்னிலை வகிக்கிறார். ஏற்கனவே பாஜ சார்பில் வெற்றி பெற்ற இந்த தொகுதியில் எம்எல்ஏ இறப்பை தொடர்ந்து நடந்த இடைத்தேர்தலில் அதே கட்சி மீண்டும் முன்னிலை பெற்றுள்ளது.

நவ்படா (ஒடிசா மாநிலம்): பாஜவின் வேட்பாளர் ஜெய் தோலகியா முன்னிலை வகிக்கிறார். பிஜூ ஜனதா தளம் எம்எல்ஏ இறப்பை தொடர்ந்து இங்கு இடைத்தேர்தல் நடந்துள்ளது.

2 தொகுதிகளில் காங்., முன்னிலை

ஜூபிலி ஹில்ஸ் (தெலுங்கானா); காங்கிரஸ் கட்சி வேட்பாளர் நவீன் யாதவ் முன்னிலை வகிக்கிறார். ஏற்கனவே பிஆர்எஸ் கட்சியின் மகந்தி கோபிநாத் வெற்றி பெற்ற இந்த தொகுதியை அவரது மறைவுக்கு பிறகு நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கைப்பற்றி உள்ளது.

அந்தா (ராஜஸ்தான்): காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பிரமோத் ஜெயின் முன்னிலை வகிக்கிறார். ஏற்கனவே பாஜ வெ ற்றி பெற்ற இந்த தொகுதியில் எம்எல்ஏவாக இருந்த கன்வர்லால் மீனா தகுதி நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து இடைத்தேர்தல் நடந்தது.வருவாய் கோட்டாட்சியரை துப்பாக்கியை காட்டி மிரட்டிய விவகாரத்தில் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பட்கம் தொகுதி (ஜம்மு காஷ்மீர்); தேசிய மாநாட்டு கட்சி வேட்பாளர் சயித் மஹ்முத் அல் மொஷாபி முன்னிலை வகிக்கிறார். உமர் அப்துல்லா ராஜினாமா செய்ததை தொடர்ந்து அவரது கட்சியே மீண்டும் முன்னிலை பெற்றுள்ளது. இரண்டு தொகுதிகளில் வெ ற்றி பெற்ற உமர் அப்துல்லா ஒன்றை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

காட்சிலா (ஜார்க்கண்ட் மாநிலம்); ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சியின் வேட்பாளர் சோமேஷ் சந்திர சோரன் முன்னிலை வகிக்கிறார். இதே கட்சியின் எம்எல்ஏவான கல்வி அமைச்சர் ராமதாஸ் சோரன் வெற்றி பெற்ற தொகுதி இதுவாகும். அவரது இறப்பை தொடர்ந்து நடந்த இடைத்தேர்தலில், அவரது கட்சி மீண்டும் முன்னிலை பெற்றுள்ளது.

டம்பா தொகுதி (மிசோரம்); மிசோ தேசிய முன்னணி கட்சியின் வேட்பாளர் லால் தங் கிலியானா முன்னிலை வகிக்கிறார். இதே கட்சி ஏற்கனவே வெற்றி பெற்ற தொகுதி இதுவாகும். வென்றவர் மரணம் அடைந்ததால் இடைத்தேர்தல் நடந்தது.

தரன் தரன் (பஞ்சாப்); ஆம்ஆத்மி கட்சி வேட்பாளர் ஹர்மித் சிங் சந்து முன்னிலை வகிக்கிறார். ஏற்கனவே ஆம்ஆத்மி வெற்றி பெற்ற இந்த தொகுதியில் வென்றவர் இறப்பை தொடர்ந்து இடை த்தே ர்தலில் அதே கட்சி மீண்டும் முன்னிலை பெற்றுள்ளது.