பாஜக தான் அதிகாரத்தின் உச்சத்தில் இருக்க வேண்டும், மற்றவர்கள் தனக்கு கீழ் என்று எண்ணுகிறது: ராகுல் காந்தி பேச்சு
டெல்லி: மக்களவையில் எஸ்.ஐ.ஆர். மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசிவருகிறார். எந்த மாநிலத்துக்கு சென்றாலும் வெவ்வேறு நடை, உடை, பாவனைகளை பார்க்க முடியும். காஞ்சிபுரம் பட்டு சேலையில் தங்க சரிகை இருக்கும். தங்க சரிகையில் நூல்கள் சேர்க்காவிட்டால் அதில் ஒன்றும் இல்லை. இந்தியா என்ற இலையின் அங்கம்தான் மக்கள் என்பதை ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் புரிந்துகொள்ளவில்லை. பாஜக தான் அதிகாரத்தின் உச்சத்தில் இருக்க வேண்டும், மற்றவர்கள் தனக்கு கீழ் என்று எண்ணுகிறது என ராகுல் காந்தி கூறினார்.


