Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

பிறப்புரிமைக் குடியுரிமைக் கொள்கையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது அமெரிக்காவிற்கு மிகவும் வருந்தத்தக்கது: அதிபர் டிரம்ப்

வாஷிங்டன்: பிறப்புரிமைக் குடியுரிமைக் கொள்கையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்ததை தொடர்ந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இது அமெரிக்காவிற்கு "மிகவும் வருந்தத்தக்கது" என்று கூறியுள்ளார். இருப்பினும், அவர் சட்டம் கொண்டு வரத் தயாராக இருப்பதாகவும், அதை எளிதாக சரிசெய்துவிட முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு குடியுரிமை மற்றும் h1b விசா உள்ளிட்டவைகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவந்தார். அதன் படி சட்டவிரோதமாகவோ அல்லது தற்காலிகமாகவோ நாட்டில் வசிக்கும் பெற்றோருக்கு அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்குக் குடியுரிமை இல்லை என அவர் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், அமெரிக்க மண்ணில் பிறக்கும் குழந்தைகளுக்குக் குடியுரிமை வழங்குவதை ரத்து செய்ய முற்பட்ட ட்ரம்பின் உத்தரவு செல்லாது என அமெரிக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை தானாகவே கிடைக்கும் என்ற 100 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டப் பாதுகாப்பை உச்சநீதிமன்றம் இன்று மீண்டும் உறுதி செய்துள்ளது.

இதனை தொடர்ந்து அதிபர் டிரம்ப் தனது சமூக வலைதள பதிவில்;

உச்ச நீதிமன்றம் பிறப்புரிமைக் குடியுரிமையை உறுதி செய்துள்ளது, இது நமது நாட்டிற்கு மிகவும் பாதகமானது. ஆனால், இந்தச் செயல்பாட்டின் போது இப்போது தீர்மானிக்கப்பட்டுள்ள ஜனாதிபதியின் ஆதரவுடன், காங்கிரஸில் சட்டத்தின் மூலம் இதை நாம் எளிதாக ஈடுசெய்ய முடியும். நீண்ட மற்றும் சிக்கலான அரசியலமைப்புத் திருத்தம் எதுவும் தேவையில்லை! நமது நாட்டிற்குச் செலவுமிக்கதும் நியாயமற்றதுமான பிறப்புரிமைக் குடியுரிமையை முடிவுக்குக் கொண்டுவரும் பணியை காங்கிரஸ் இன்றே தொடங்க வேண்டும். அவர்களுக்கு எனது முழுமையான மற்றும் மொத்த ஆதரவு உண்டு. என கூறியுள்ளார்.