Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உயிரிழந்த பறவைகளை வெறும் கைகளால் தொடக்கூடாது -தமிழ்நாடு கால்நடைத்துறை அறிவுறுத்தல்

சென்னை : உயிரிழந்த பறவைகளை வெறும் கைகளால் தொடக்கூடாது என்று தமிழ்நாடு கால்நடைத்துறை அறிவுறுத்தல் வழங்கி உள்ளது. மேலும், "உயிரிழக்கும் பறவைகள் மற்றும் பசு மாடுகளை எரிக்க வேண்டும் அல்லது ஆழமாக குழிதோண்டி புதைக்க வேண்டும். கோழிப் பண்ணைகளுக்குள் வெளி நபர்களை அனுமதிக்கக்கூடாது. ஒரு கோழிப் பண்ணையில் வேலை செய்பவர் பல பண்ணைகளுக்குச் செல்வதை தவிர்க்க வேண்டும். பிற மாநிலங்களில் இருந்து கோழிகளையோ, கோழி இறைச்சியையோ கொண்டுவரக்கூடாது,"இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.