Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
DMK MK Stalin
search-icon-img
Advertisement

உயிரியல் ஆராய்ச்சி மையத்தில் லேப் டெக்னீசியன், அசிஸ்டென்ட் வேலை

ஒன்றிய அரசின் கீழ் உள்ள தேசிய உயிரியல் ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள சயின்டிஸ்ட் உள்ளிட்ட பணிகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியிடங்கள் விவரம்:

1. சயின்டிஸ்ட் கிரேடு- 3 (வெட்): 1 இடம். வயது: 35க்குள். சம்பளம்: ரூ.56,100- ரூ.1,77,500. தகுதி: கால்நடை அறிவியலில் முதுநிலை பட்டம் தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2. ஜூனியர் சயின்டிஸ்ட்: 12 இடங்கள். வயது: 30க்குள். சம்பளம்: ரூ.44,900- ரூ.1,42,400. தகுதி: மைக்ரோபயாலஜி/ கிளினிக்கல் மைக்ரோ பயாலஜி/ பயோஇன்பர்மேட்டிக்ஸ்/பயோகெமிஸ்ட்டிரி/ பாக்டீரியாலஜி/பார்மக்காலஜி/செரோலஜி/மோல்குலர் பயாலஜி/ பிசியாலஜி பிரிவில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

3. அட்மினிஸ்டிரேட்டிவ் அசிஸ்டென்ட்: 1 இடம். வயது: 30க்குள். சம்பளம்: ரூ.35,400- ரூ.1,12,400. தகுதி: ஏதாவதொரு பாடத்தில் 50% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

4. ஜூனியர் இந்தி டிரான்ஸ்லேட்டர்: 1 இடம். வயது: 30க்குள். சம்பளம்: ரூ.35,400- ரூ.1,12,400. தகுதி: இந்தி மற்றும் ஆங்கில பாடங்களுடன் முதுநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

5. லேபரட்டரி டெக்னீசியன்: 25 இடங்கள். வயது: 30க்குள். சம்பளம்: ரூ.35,400- ரூ.1,12,400. தகுதி: உயிரியல்/மைக்ரோ பயாலஜி/ பயோடெக்னாலஜி/பயோ கெமிஸ்டிரி/ மோல்குலர் பயாலஜி பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் டிஎம்எல்டி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

6. அசிஸ்டென்ட்: 1 இடம். வயது: 27க்குள். சம்பளம்: ரூ.19,900- ரூ.63,200. தகுதி: ஏதாவதொரு பாடத்தில் 50% மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகளும், இந்தியில் 30 வார்த்தைகளும் கம்ப்யூட்டரில் டைப் செய்ய தெரிந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.

எழுத்துத்தேர்வு மற்றும் திறன் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். https://nib.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் பிரின்ட் அவுட் எடுத்து தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன் விரைவுத் தபாலில் அனுப்ப வேண்டிய முகவரி: The Director, National Institute of Biologicals, (Mimistry of Health & Family Welfare), A-2, Sector-62, Institutional Area, Noida, Uttarpradesh- 201 309.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: இன்று (08.04.2026.)

பிரின்ட் அவுட் அனுப்ப கடைசி நாள்: 14.04.2026.