தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா உள்பட 5 நாடுகள் மீது 100 சதவீத வரி விதிக்கும் மசோதா: அமெரிக்க நாடாளுமன்றத்தில் நாளை இறுதி வாக்கெடுப்பு

 

Advertisement

வாஷிங்டன்: ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா உள்பட 5 நாடுகள் மீது 100 சதவீத வரி விதிக்கும் மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் நாளை இறுதி வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதனால் இந்திய பொருட்களின் விலை அதிகரிக்கும் அபாயம் உள்ளது. ரஷ்யா-உக்ரைன் இடையே கடந்த 4 ஆண்டுகளாக போர் நீடித்து வருகிறது. இந்த போரை விரும்பாத அமெரிக்க அதிபர் டிரம்ப், போரை நிறுத்த முயற்சிகளை எடுத்து வருகிறார். ஆனாலும் எந்த பலனும் இல்லை. என்ன செய்யலாம் என நினைத்தபோதுதான், இந்த போரை நடத்த ரஷ்யாவுக்கு நிதி ஆதாரமாக இருப்பது அதன் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயுதான். எனவே, ரஷ்யாவிடம் இருந்து பிற நாடுகள் கச்சா எண்ணெய் வாங்குவதை தடுத்துவிட்டால், ரஷ்யாவுக்கு போர் நடத்த தேவையான நிதி கிடைக்காது என்று டிரம்ப் கணக்கு போட்டார். ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்ததுடன், அந்நாட்டிடம் அதிகமாக கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு அதிகமான வரி விதித்து வருகிறார்.

அந்த வகையில், ரஷ்ய எண்ணெயை வாங்கும் இந்தியா, சீனா மீது 100 சதவீதம் கூடுதல் வரி விதிக்க கோரும் புதிய மசோதா அமெரிக்க செனட் சபையின் நடைமுறை வாக்கெடுப்பில் நிறைவேறியது. லிண்ட்சே ஓ.கிரஹாம் ரஷ்யா மற்றும் ஈரான் தடைகள் சட்டம் 2026’ என பெயரிடப்பட்டுள்ள இந்த மசோதா, ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது 100 சதவீதம் வரை இறக்குமதி வரி விதிக்க அமெரிக்க அதிபருக்கு அதிகாரம் வழங்குகிறது. ரஷ்யாவின் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை அதிகம் இறக்குமதி செய்யும் இந்தியா, சீனா, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி மற்றும் அஜர்பைஜான் ஆகிய 5 நாடுகள் மீது 100 சதவீத வரி விதிக்க இந்த மசோதா பரிந்துரைக்கிறது. ரஷ்யாவிலிருந்து நேரடியாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 500 சதவீத வரை வரி விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

2022 உக்ரைன் போருக்கு பிறகு, உலகளவில் ரஷ்யாவிடம் இருந்து மலிவு விலையில் அதிகளவு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் முன்னணி நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. இந்த மசோதா சட்டமானால், இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் மீது 100 சதவீத கூடுதல் வரி விதிக்கப்படும் அபாயம் உள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா மீது அமெரிக்க நாடாளுமன்றத்தில் நாளை இறுதி வாக்கெடுப்பு நடக்கிறது. அந்த மசோதா நிறைவேற்றப்பட்ட பின், இறுதியாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை நிறைவேற்றினால் அமெரிக்காவில் நம் நாட்டு பொருட்களுக்கான வரி இரு மடங்காக உயர்த்தப்படும்.

நமக்கு நஷ்டம்தான் ஏற்படும். இப்படி வரி பயத்தை காட்டி இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளை வழிக்கு கொண்டுவர டிரம்ப் திட்டமிட்டுள்ளார். இதை இந்தியா எப்படி கையாள போகிறது என்பது போக போகத்தான் தெரியும்.

Advertisement

Related News