மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம், ஜிஎல்இ மற்றும் ஜிஎல்எஸ் நைட் எடிஷன் கார்களை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. ஜிஎல்இ காரில் 2.0 லிட்டர் 4 சிலிண்டர் டீசல் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 270 எச்பி பவரையும் 550 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இதுதவிர 3.0 லிட்டர் 6 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் வேரியண்டும் உள்ளது.
ஜிஎல்எஸ் காரில் 380 எச்பியை வெளிப்படுத்தக்கூடிய 3.0 லிட்டர் இன்லைன் 6 பெட்ரோல் இன்ஜின் இடம் பெற்றிருக்கும். இதுதவிர 367 எச்பி பவரை வெளிப்படுத்தும் 3.0 லிட்டர் இன்லைன் 6 டீசல் இன்ஜின் வேரியண்டும் உள்ளது. இவற்றில் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் 4 மேட்டிக் ஆல்வீல் டிரைவ், ஏர் சஸ்பென்ஷன் ஆகியவை ஸ்டாண்டர்டு அம்சங்களாக இடம் பெற்றுள்ளன.
துவக்க ஷோரூம் விலையாக ஜிஎல்இ 300டி 4 மேட்டிக் நைட் எடிஷன் துவக்க விலை சுமார் ரூ.1.05 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜிஎல்எஸ் 450 4 மேட்டிக் நைட் எடிஷன் துவக்க விலை சுமார் ரூ.1.41 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


