Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பெங்களூரு பெண் பாலியல் புகார் கருப்பு முருகானந்தம் முன்ஜாமீன் கோரி மனு

மதுரை: பாஜ முன்னாள் நிர்வாகி கருப்பு முருகானந்தம் முன்ஜாமீன் கோரி ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘பெங்களூரைச் சேர்ந்த ஒரு பெண், கடந்த செப். 24ம் தேதி திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதில் நானும், அந்தப் பெண்ணும் மிக நெருக்கமாக இருந்ததாகவும் அவரை இழிவுபடுத்தும் வகையில் மார்பிங் புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்ததாகவும், தன்னை ஏமாற்றியதாகவும் கூறியிந்தார்.

அந்த மனுவின் அடிப்படையில் என் மீது திருச்சி ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த குற்றச்சாட்டுகள் பொய்யானது. என் மீது பொய்யான புகாரை அந்த பெண் அளித்துள்ளார். எனவே, எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனு நாளை (அக். 5) நீதிபதி முரளிசங்கர் முன் விசாரணைக்கு நேற்று பட்டியலிடப்பட்டுள்ளது.