Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

பெங்களூருவில் 7வது மாடியிலிருந்து குதித்த புதுச்சேரி பெண் சாப்ட்வேர் இன்ஜினியர் பலி: மரக்கிளையில் தொங்கிய காதலன் படுகாயங்களுடன் அட்மிட்

பெங்களூரு: பெங்களூருவில் காதலனுடன் ஏற்பட்ட தகராறில் 7வது மாடியிலிருந்து குதித்த சாப்ட்வேர் இன்ஜினியர் பெண் உயிரிழந்த நிலையில், அவருடன் கீழே விழுந்த காதலன் மரக்கிளைகளில் சிக்கி உயிர் தப்பினார். புதுச்சேரியைச் சேர்ந்தவர் ஜனனி (23). இவர் கர்நாடக மாநிலம் பெங்களூரு ஒயிட்பீல்டு பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் தங்கி சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வந்தார். இவரும், சரக்கு போக்குவரத்து நிறுவனத்தில் பணியாற்றி வரும் அதே பகுதியைச் சேர்ந்த மாணிக்கவேலு (30) என்பவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஜனனி தங்கியிருந்த விடுதிக்கு வந்த மாணிக்கவேலுவுக்கும் அவருக்கும் இடையே நேற்று காலை திடீரென கடும் வாக்குவாதம் மற்றும் பிரச்னை ஏற்பட்டது. இதில் கடுமையான ஆத்திரமடைந்த ஜனனி, விடுதியின் 7வது மாடியிலிருந்து திடீரென கீழே குதித்ததோடு, மாணிக்கவேலுவையும் பிடித்து கீழே இழுத்ததாகக் கூறப்படுகிறது. இதில் மாடியிலிருந்து தரையில் விழுந்த ஜனனி படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஆனால் கீழே விழுந்த மாணிக்கவேலு, அங்கு நின்ற மரத்தின் கிளைகளில் மோதி கீழே விழுந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இருப்பினும் பலத்த காயமடைந்த அவர் உடனடியாக மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், ‘இருவருக்கும் இடையே நடந்த வாக்குவாதத்தின் பின்னணி என்ன, இது தற்கொ* முயற்சியா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்’ என்று தெரிவித்தனர்.