Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

அமெரிக்காவை பந்தாடிய பெல்ஜியம்

சார்லஸ் டி கெட்டேலேரேவில் நடந்த ரவுண்ட் ஆப் 16 சுற்று போட்டியில் பெல்ஜியம்-அமெரிக்கா அணிகள் மோதின. தொடக்கம் முதலே பெல்ஜியம் அணி ஆதிக்கம் செலுத்தியது. 9வது மற்றும் பெல்ஜியம் இளம் வீரர் சார்லஸ் டி கெட்லேரே ஒரு கோல் போட்டார். போட்டியின் 31வது நிமிடத்தில் அமெரிக்கா அணிக்கு ஒரு ப்ரீ கிக் வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் மாலிக் தில்மேன் 1 கோல் அடுத்ததால் 1-1 என்ற சமன் நிலையானது.

33வது நிமிடத்தில் பெல்ஜியம் இளம் வீரர் சார்லஸ் டி கெட்லேரே மீண்டும் ஒரு கோல் அடிக்க பெல்ஜியம் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. முதல் பாதியில் முடிவில் 2-1 என்ற கணக்கில் பெல்ஜியம் முன்னிலை பெற்ற நிலையில், 2வது பாதியின் 57வது நிமிடத்தில் அமெரிக்க கோல்கீப்பர் செய்த மிகப்பெரிய தற்காப்பு தவறைச் சாதகமாக்கி பெல்ஜியத்தின் வானாகன் கோல் அடித்து அணியை 3-1 என முன்னிலைப்படுத்தினார்.

போட்டியின் கூடுதல் நேரத்தில் பெல்ஜியத்தின் நட்சத்திர வீரர் ரொமேலு லுகாகு 4வது கோல் போட இறுதியில் 4-1 என்ற கணக்கில் பெல்ஜியம் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றது. காலிறுதியில் ஸ்பெயினுடன் பெல்ஜியம் அணி மோத உள்ளது.