Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

பெல்ஜியத்துடன் இந்தியா இன்று மோதல்: உலக ஹாக்கியில் 7வது இடம் யாருக்கு?

ஆம்ஸ்டெல்வின்: 16வது உலக கோப்பை ஹாக்கி தொடர் பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் நடந்து வருகிறது. இதில் மகளிர் பிரிவில் நேற்று நடந்த 5வது இடத்திற்கான போட்டியில் தரவரிசையில் 9வது இடத்தில் உள்ள இந்தியா 3-1 என்ற கோல் கணக்கில் 5வது ரேங்க் ஜெர்மனியை வீழ்த்தியது.

1974ம் ஆண்டு நடைபெற்ற ஹாக்கி உலக கோப்பையில் இந்தியா 4வது இடத்தை பிடித்திருந்தது. அதன்பிறகு தற்போது இந்தியா 5வது இடம் பிடித்தது தான் சிறந்த செயல்பாடாகும். ஆடவர் பிரிவில் 7வது இடத்திற்கான போட்டியில் இன்று இரவு 9.45 அணிக்கு பெல்ஜியம் அணியுடன் இந்தியா மோதுகிறது. தரவரிசையில் 2வது இடத்தில் உள்ள பெல்ஜியத்தை 8வது இடத்தில் உள்ள இந்தியா வீழ்த்துமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.