Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

ஆன்லைனில் முன்பதிவு செய்தாலும் மதுபானத்தை நேரில்தான் வாங்க வேண்டும்: அமைச்சர் விக்னேஷ் விளக்கம்

சென்னை: மதுபானம் வீடு தேடி விற்பனை என்ற செய்திக்கு, அமைச்சர் விக்னேஷ் மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; பாட்டிலுக்கு ரூ.10 பெறுவது ஜெயலலிதா ஆட்சிக்காலமான 2011 முதல் செயல்பாட்டில் உள்ளது. தவெக அரசு மட்டுமே இதன்மீது நடவடிக்கை எடுத்துள்ளது. டாஸ்மாக் பாட்டிலுக்கு மேலும் ரூ.10 பெறுவதை தடுக்கவே ஆன்லைனில் முன்பதிவு செய்யபப்டுகிறது. வீடு தேடி மதுபானம் வரும் என்று சொல்வது தவறு; ஆன்லைன் மூலம் மதுவுக்கு பதிவு என்பது பரிசோதனை நிலையில்தான் உள்ளது.

ஆன்லைன் மூலம் மதுவிற்பனை செய்யும் திட்டமில்லை; மதுவுக்கு முன்பதிவு மட்டுமே செய்யப்படும். ஆன்லைன் முன்பதிவு திட்டத்தால் வீடுகளுக்கே சென்று டாஸ்மாக் மது விநியோகம் செய்யப்படாது. ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து டாஸ்மாக் கடையில் க்யூ ஆர் ஸ்கேன் செய்து மதுபானம் வாங்கலாம். மக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடைகள் இடமாற்றம் செய்யப்படும். மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 பெறுவதை தடுப்பதற்காகவே புதிய திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. மதுக்கூடங்களின் அவல நிலை மாற்றப்படும். டாஸ்மாக் கடைகளில் அனைத்து வகை மதுபானங்களுக்கும் கிடைக்கவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் Budweiser போன்ற பீர் ஏன் விற்பனை செய்யப்படவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் விக்னேஷ்; ஒரு திட்டம் வரும்போது அதற்கு எதிர்ப்புகள் அதிகமாக வரும்; இருந்தாலும் எதிர்ப்பு எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை அரசு உள்வாங்கி கொண்டிருக்கிறது; Budweiser போன்ற பீர் வகைகளை தமிழ்நாட்டிற்கு கொண்டுவர பார்க்கலாம் என்று கூறினார்.