சென்னை: சென்னை நகரின் அழகை புகைப்படம் எடுத்து அனுப்பலாம் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது. பாரம்பரிய சின்னங்கள் முதல் நவீன கட்டடக்கலை வரை சென்னையின் அழகை புகைப்படம் எடுத்து அனுப்பலாம். முக்கிய இடங்கள், தினசரி நிகழ்வுகள் மற்றும் காட்சிகளை புகைப்படம் எடுத்து இணையதளத்தில் பதிவிடலாம். சிறந்த புகைப்படங்கள் சென்னை மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் வாரந்தோறும் இடம்பெறும் என்று தெரிவித்துள்ளது.
+
Advertisement


