வங்கக்கடலில் அடுத்த 36 மணி நேரத்திற்குள் உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: வானிலை ஆய்வு மையம்
டெல்லி: வங்கக்கடலில் அடுத்த 36 மணி நேரத்திற்குள் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்று முதல் வரும் 15ம் தேதி வரை தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு எனவும் மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு எனவும் வானிலை மையம் கணித்துள்ளது.


