தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வங்கக் கடலில் அடுத்தடுத்த 2 காற்றழுத்தங்கள் உருவாகும் வாய்ப்பு: 14ம் தேதி முதல் பலத்த மழை

சென்னை: வங்கக் கடலில் அடுத்தடுத்து இரண்டு காற்றழுத்தங்கள் உருவாகும் சாதகமான சூழ்நிலை இருப்பதால், 14ம் தேதி முதல் டிசம்பர் 7ம் தேதி வரை தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தொடர் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் நேற்று தென் மாவட்டங்கள் மற்றும் மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்கள், திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்துள்ளது. விழுப்புரம் 20மிமீ, கோவை கோலார்பட்டி 25மிமீ, பொள்ளாச்சி 21 மிமீ, தளி 22 மிமீ, உடுமலைப் பேட்டை 23மிமீ, மடத்துக்குளம் 49மிமீ, கொடைக்கானல் மேற்கு 61 மிமீ, தென்காசி 72 மிமீ மழை பெய்துள்ளது.

Advertisement

இந்நிலையில், மியான்மர் பகுதியில் இருந்து தெற்கு நோக்கி பயணித்து மத்திய வங்கக் கடல் பகுதியில் தற்போது வந்து சேர்ந்துள்ள காற்றழுத்த தாழ்வு நிலையும், இலங்கைக்கு தென்கிழக்கு திசையில் நீடித்துக் கொண்டு இருக்கும் காற்று சுழற்சி ஆகிய இரண்டும், இமயமலைப் பகுதியில் இருந்து காற்றை இழுக்கின்றன. இமயமலைக் காற்று தமிழகத்தில் குளிர் காற்றாக நுழைவதால், காலை நேரங்களில் பனிப்பொழிவாக இருக்கிறது. அத்துடன் தமிழகத்தில் சில இடங்களில் நேற்று மழை பெய்துள்ளது. டெல்டாவின் தெற்குப்பகுதியில் இன்று மதியம் மழை பெய்யும். வடக்குப் பகுதியில் இ ருந்து வரும் குளிர் காற்று மேலெழுந்து செல்லும்போது வெப்பம் அடையும். அதனால், வட மேற்கு மாவட்டங்களில் இன்றும் மழை பெய்யும்.

இன்று மதியம் டெல்டாவில் ஒரு சில இ டங்களில் மழை பெய்தாலும், புதுக்கோட்டை மாவட்டத்திலும் ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்கள் கன்னியாகுமரி, திண்டுக்கல், கோவை, ஈரோடு, திருப்பூர் தெற்கு பகுதிகளில், மதுரை, தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களிலும் இன்று ஆங்காங்கே மழை பெய்யும். ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும். அதன் தொடர்ச்சியாக 13ம் தேதியும் இதேநிலை நீடிக்கும். டெல்டாவில் தெற்கு பகுதியில் மழை பெய்யும். வட கடலோரத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும். தென் உள் மாவட்டங்களில் மழை பெய்யும். திருநெல்வேலி மேற்கு தொடச்சி மலைப் பகுதிகள் கொடைக்கானல் மலைப் பகுதிகள், தென்காசி மாவட்டங்களிலும் மழை பெய்யும்.

வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி 14ம் தேதியில் மேற்கு நோக்கி நகர்ந்து கேரளாவில் மழை பெய்யும். 16ம் தேதி காலையில் வேதாரண்யம், ராமேஸ்வரம் பகுதியில் மழை பெய்யும். 17ம் தேதியில் அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்யும். இந்த மழை 21ம் தேதி வரை மழை நீடிக்கும். அது, பின்னர் செயலிழந்த நிலையில் அரபிக் கடலுக்கு செல்லும். இதற்கிடையே, தென்சீனக் கடல் பகுதியில் உள்ள ‘சென்யார் புயல்’ வலுவிழந்த நிலையில், மேற்கு நோக்கி பயணித்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக 22ம் தேதி வங்கக் கடல் பகுதிக்கு வந்து சேரும். இது 700 கிமீ தொலைவில் இருக்கும் போதே தமிழகத்தில் மழை பெய்யத் தொடங்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

வங்கக் கடலில் இறங்கி தமிழகத்தை நெருங்க, நெருங்க தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்யும். இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழகத்தில் கரையைக்கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக மத்திய மாவட்டங்களின் ஊடாக தரையைக் கடக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக 26ம் தேதி வரையில் பலத்த மிக பலத்த மழை திருவள்ளூர் மாவட்டம் தொடங்கி கன்னியாகுமரி வரை பெய்யும். டெல்டாவில் அதீத மழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நவம்பர் இறுதியில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி டிசம்பர் 7ம் தேதி வரையில் தமிழகத்தில் பலத்த மழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Related News