Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

எந்த வரிசையிலும் பேட்டிங் செய்யத் தயார்: தொடர் நாயகன் தேவ்தத் படிக்கல் பேட்டி

கொழும்பு: இந்தியா-இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையே கொழும்பில் நடந்த 2வது டெஸ்ட் டிராவில் முடிந்தது. காலே மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட்டில் இந்தியா வெற்றிபெற்றதால் 1-0 என தொடரை கைப்பற்றியது. 2 சதம் உள்பட3 இன்னிங்சில் 328 ரன் விளாசிய தேவ்தத் படிக்கல் தொடர் நாயகன் விருது பெற்றார். அவர் கூறியதாவது: உண்மையைச் சொல்லப்போனால், ரன்கள் குவிப்பதிலேயே நான் மகிழ்ச்சியடைகிறேன். எந்த வரிசையில் விளையாடுகிறேன் என்பது முக்கியமல்ல. அது 3வது இடமாகவோ அல்லது வேறு எந்த இடமாகவோ இருக்கலாம், அது ஒரு பொருட்டல்ல. என்னைப் பொறுத்தவரை அணியின் வெற்றிதான் முக்கியம். அந்த வெற்றிகளுக்கு நான் பங்களிக்கும் வரை நான் மகிழ்ச்சியாகவே இருப்பேன்.

தொடர்ந்து கடினமாக உழைக்க வேண்டும்; அது மட்டுமே உங்கள் கட்டுப்பாட்டில் உள்ள விஷயம். ஆடும் லெவனில் இடம்பெறுவது எனது கட்டுப்பாட்டில் இல்லை. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சக வீரர்களுக்கு உதவ முயற்சிக்க வேண்டும். அதற்காக எப்போதும் தயாராக இருக்க வேண்டும். என்னால் அதைச் செய்ய முடிந்ததில் மகிழ்ச்சி. தொடர் நாயகன் விருது பெற்றது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இருப்பினும், இந்தப்(2வதுடெஸ்ட்) போட்டியிலும் வெற்றி பெற்றிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். இது இளம் வீரர்களைக் கொண்ட அணி. நாம் தொடர்ந்து கற்றுக்கொள்வது முக்கியம், என்றார்.

இந்தியாவுக்கு டெஸ்ட் சாம்பியன் ஷிப் பைனல் வாய்ப்பு எப்படி?;

ஐசிசி டெஸ்ட் சாம்பியன் ஷிப் புள்ளி பட்டியலில் இந்தியா 51.52 சதவீத வெற்றியுடன் 5வது இடத்தில் உள்ளது. ஆஸி, தெ.ஆப்ரிக்கா, நியூசிலாந்து, வங்கதேசம் முதல் 4 இடங்களில் உள்ளன. இந்தியா அடுத்ததாக நியூசிலாந்துக்கு எதிராக நவம்பரில் 2 டெஸ்ட், ஆஸி.க்கு எதிராக சொந்த மண்ணில் 5 டெஸ்ட்டில் ஆட உள்ளது. இந்த 7 டெஸ்ட்டில் குறைந்தது 6ல் வென்றால் தான் இறுதிபோட்டிக்கு வாய்ப்பு கிடைக்கும்.