Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வீட்டின் குளியல் அறையில் மின்சாரம் பாய்ந்து மெக்கானிக் பலி

பூந்தமல்லி: பல்லாவரம் அடுத்த பம்மல், எல்ஐசி காலனி, 3வது குறுக்கு தெரு, பாபா அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் நரேஷ்குமார் (32). அதே பகுதியில் ஏசி மெக்கானிக்காக பணிபுரிந்து வந்தார். இவருக்கு தானுப்பிரியா என்ற மனைவியும், 6 மாத பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன் அவரது மனைவி தானுப்பிரியா, மதுரையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கிருந்து தானுப்பிரியா நேற்று தனது கணவருக்கு போன் செய்தபோது, வெகுநேரமாகியும் அவர் பதிலளிக்காததால், சந்தேகமடைந்த தானுப்பிரியா, நரேஷ்குமாரின் சகோதரர் சரவணன் என்பவரை, வீட்டிற்குச் சென்று பார்த்து வருமாறு கூறி அனுப்பி வைத்தார்.

அதன்படி சரவணன், நரேஷ்குமாரின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, அங்கு வீடு உள்பக்கமாக தாழிட்டு இருந்தது. நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்கவில்லை. இதனால், அக்கம் பக்கத்தினர் உதவியோடு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது, குளியலறையில் மின்சாரம் பாய்ந்து நிர்வாண நிலையில் நரேஷ்குமார் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக சங்கர் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், நரேஷ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.