Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு ரூ.2 கோடி: பேரம் பேசும் தவெக மாவட்ட செயலாளர்

திருப்பூர்: திருப்பூரில் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு தவெக மாவட்ட செயலாளர் ரூ.2 கோடி பேரம் பேசும் ஆடியோ வைரலாகி வருகிறது. உள்ளாட்சித் தேர்தல் மற்றும் பல்வேறு தேர்தல்களில் தவெக சார்பில் போட்டியிட அக்கட்சியினர் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் தேர்தலில் போட்டியிட அக்கட்சியின் மாவட்ட மாநில நிர்வாகிகள் பணம் கேட்டு மிரட்டுவதாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகிறது. திருப்பூர் மேற்கு மாவட்ட தவெக செயலாளர் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு ரூ.2 கோடி செலவாகும் என பேசியதாக ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்லடம் கிழக்கு ஒன்றிய தவெக செயலாளராக இருப்பவர் பாலசுப்பிரமணியம்.

இவர் உள்ளாட்சித் தேர்தலில் கணபதிபாளையம் பஞ்சாயத்து தலைவராக போட்டியிடுவதற்காக மேற்கு மாவட்ட செயலாளர் ஜி.கே. சங்கர் என்பவரிடம் கோரிக்கை வைத்துள்ளார். அதற்கு அவர், ‘‘ஒரு கோடியில் இருந்து 2 கோடி ரூபாய் வரை செலவாகும். எப்படி நீ செலவு செய்வாய்?. எப்போதும் எம்எல்ஏ அலுவலகத்திலேயே இருக்கிறாயே. கட்சி வேலை எதுவும் செய்வதில்லை, எல்லோருக்கும் கட்சி பொறுப்பு வாங்கி கொடுத்துவிட்டு நான் இப்படி இருக்கிறேன்’’ என்று சொல்கிறார். பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு ரூ.2 கோடி தவெக மாவட்ட செயலாளர் ஜி.கே.சங்கர் பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து தவெக மேற்கு மாவட்ட செயலாளர் ஜி.கே.சங்கரிடம் கேட்டபோது, ‘‘பாலசுப்பிரமணியிடம் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக நான் பணம் கேட்கவில்லை. கட்சிக் கூட்டத்தில் பேசியதை எனக்கு எதிராக செயல்படும் நபர்கள் சிலர், குரல் பதிவு செய்து வெளியிட்டுள்ளனர். உன்னால் செலவு செய்ய முடியுமா? என்றுதான் கேள்வி எழுப்பினேன். அது தற்போது தவறாக வைரலாகி வருகிறது. இந்த ஆடியோ பாலசுப்பிரமணியத்திடம் பணம் கேட்டு பேசியது கிடையாது’’ என்றார்.