Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விக்கிரவாண்டியில் இன்று மாலை பிரசாரம் ஓய்கிறது; 10ம் தேதி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடக்கம்: அமைச்சர் உதயநிதி இறுதி கட்ட பரப்புரை

விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைதேர்தல் பிரசாரம் இன்று மாலை முடிவடையும் நிலையில் மாலை 6 மணிக்குள் வெளியூரில் இருந்த வந்த அரசியல் கட்சியினர், தொகுதிக்கு சம்பந்தமில்லாதவர்களை வெளியேற்ற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நாளைமறுநாள் 10ம் தேதி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. இதனையொட்டி தொகுதி முழுவதும் எஸ்பி தலைமையில் துணை ராணுவம் உள்ளிட்ட 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இறுதிகட்ட பரப்புரையில் ஈடுபட்டார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி திமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்த புகழேந்தி காலமானதை தொடர்ந்து அந்த தொகுதிக்கு இடைதேர்தல் ஜூலை 10ம் தேதி நடக்க உள்ளது.

இதற்காக கடந்த மாதம் 14ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இந்தியா கூட்டணியில் திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா, தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி அபிநயா மற்றும் சுயேட்சைகள் உள்பட 56 பேர், 64 வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். மனுக்கள் பரிசீலனையில் 35 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 29 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. தொடர்ந்து இறுதிவேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் கட்சி தலைவர்களின் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியது. கடந்த 10 நாட்களுக்கு மேலாக நடந்து வந்த பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. திமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் மற்று கூட்டணி கட்சிகளான விசிக தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, மா.கம்யூனிஸ்ட் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் முத்தரசன், காதர்மொய்தீன், ஜவாஹிருல்லா ஆகியோர் பிரசாரம் மேற்கொண்டனர்.

நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் மேற்கொண்டார். அதேபோல் பாமக வேட்பாளரை ஆதரித்து ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், சவுமியாஅன்புமணி, பாஜ தலைவர் அண்ணாமலை, அமமுக டிடிவி தினகரன், நடிகர் சரத்குமார் உள்ளிட்டவர்களும் பிரசாரம் செய்தனர். திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், வீடியோ வெளியிட்டு விக்கிரவாண்டியில் மிகப்பெரிய வெற்றியை தேடி தரவும், சமூகநீதியை நிலைநாட்டிட வேண்டுமென பொதுமக்கள், திமுக தொண்டர்களிடம் கேட்டுகொண்டார். இதனிடையே நேற்று திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் விக்கிரவாண்டி தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். இன்று மாலை 5 மணியளவில் இறுதிகட்ட பிரசாரத்தை விக்கிரவாண்டியில் நிறைவு செய்கிறார். அதேபோல், பாமக வேட்பாளர் அன்பு