Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

விலைகளை உயர்த்தி பேரிடியை மக்களுக்கு தீபாவளி பரிசாக கொடுத்துள்ள தோல்வி தவெக அரசு.!!

சென்னை: ஆவின் பால் பொருட்கள் விலை உயர்வுக்கு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இந்த நிலையில் ஆவின் பால் பொருட்கள் விலை உயர்வு, பழனி கோவில் பிரசாதம் விலை உயர்வு என அடுக்கடுக்காக விலைகளை உயர்த்தி வரும் தவெக ஆட்சி உண்மையாகவே மக்களுக்கானது தானா என சந்தேகமா இருக்கு என பாஜக தலைவர்களில் ஒருவரான வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பி உள்ளார்.

இது தொடர்பான அறிக்கையில் அவர் கூறி உள்ளதாவது; ஒரு பக்கம் வெங்காயம் விலை உயர்வு உரிக்காமலேயே கண்ணீர் வரவழைக்கிறது என்றால், நாங்க இதுமட்டுமல்ல இந்தா பாருங்க என்று ஆவின் பால் பொருட்கள் விலையை உயர்த்தியும், பழனி கோவில் பிரசாதங்களின் விலையை உயர்த்தியும் பேரிடியை மக்கள் மேல் இறக்கி வைத்து தீபாவளி பரிசாகக் கொடுத்திருக்கிறது ஆளும் தவெக அரசு..!

ஆட்சிக்கு வந்த 6 மாசத்துல போதும்டா சாமி.. இந்த ஆட்சி என்ற மக்களின் முணுமுணுப்பு இப்போது ஓங்கிய குரலாக ஒலிக்கத் துவங்கி விட்டது. ஆனா நாங்க ரீல்ஸ் போடுறதுல மட்டும் குறையே வைக்க மாட்டோம்னு இவங்க பண்ற நிர்வாகத் திறனற்ற ஆட்சிக்கு பாதிக்கப்படுறது என்னவோ தமிழ்நாட்டு மக்கள் தான்..!

ஜெய்ஹிந்த் பட காமெடி போல 'நான் தலைகீழாகத்தான் குதிப்பேன்' என்று மக்கள் நன்மைக்கு எதிரான செயல்களையே தொடர்ந்து செய்து வரும் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு தோல்வி அடைந்த அரசு தான் என்று சாடியுள்ளார்.