Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உதயநிதி மீதான நடவடிக்கை உள்நோக்கமுடையது.. இந்த வேகத்தை உங்க கட்சியினர் மீதான புகார்களில் இதுவரை ஏன் காட்டல!!

சென்னை: எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீதான கைது நடவடிக்கை முழுக்க உள்நோக்கம் கொண்டது என மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி கண்டனம் தெரிவித்து உள்ளார். எதிர்க்கட்சியினர் மீது காட்டும் வேகத்தை ஆளுங்கட்சியினர் மீது பொதுமக்களும், பாதிக்கப்பட்டவர்களும் கொடுக்கப்பட்டுள்ள பல்வேறு புகார்களின் மீது ஏன் இந்த அரசு காட்டவில்லை என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.

தஞ்சையில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் யாருடைய பெயரையும் நேரடியாக குறிப்பிட்டு பேசாத நிலையில்; பொருத்தமற்ற வழக்குகளை பதிவு செய்து உதயநிதியை கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. காவிரி விவகாரம் தொடர்பாக சட்டமன்றத்தில் உறுதியாக செயலாற்றுவோம் என அவர் நேற்றைய ஆர்ப்பாட்டத்தில் கூறியிருந்தார். நாளை சட்டப்பேரவை கூடவிருக்கும் சூழலில்; அவர் தற்போது கைது செய்யப்பட்டிருப்பது இந்த அரசின் உள்நோக்கத்தை வெளிக்காட்டுவதாகவே இருக்கிறது.

அவரது பேச்சு மறைமுகமாக தங்களை தாக்குவதாக கருதினால்; அதை மறுப்பதற்கும், கண்டிப்பதற்கும், விமர்சிப்பதற்கும் சம்மந்தப்பட்டவர்களுக்கு உரிமை உண்டு. ஆனால் பொருத்தமற்ற வழக்குகளை பதிவு செய்து; அவசர அவசரமாக அவரை கைது செய்திருப்பதை மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் வன்மையாக கண்டிப்பதாக கூறியுள்ளார். தமிழ்நாடு அரசு இவ்விஷயத்தில் வரம்பு மீறியிறுக்கிறது என்பதில் ஐயமில்லை என்றும் அன்சாரி கூறியுள்ளார்.