Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உதயநிதி ஸ்டாலின் மீது 12 மணி வரை கைது நடவடிக்கை கூடாது - உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

சென்னை: எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்யும் நடவடிக்கைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. திர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்ற நடவடிக்கையில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் கைது செய்ய முயற்சிப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்காக விசாரிக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த கோரிக்கையை ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம், இன்று பிற்பகலில் இந்த மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு ஏற்பதாக அறிவித்துள்ளது. அதே நேரம் வழக்கு விசாரணைக்கு வரும் வரை (12 மணி வரை) உதயநிதி ஸ்டாலினை கைது செய்ய கூடாது என அரசு வழக்கறிஞரிடம் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.