சினிமால ஹீரோ; CM-ஆ நீங்க ஜீரோ தான்.. உங்க ஆட்சி வந்ததுல இருந்து 50 கைதிகள் தப்பிச்சு ஓடியிருக்காங்க...
சென்னை: தவெக ஆட்சியில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை; காவல்துறையினருக்கும் பாதுகாப்பு இல்லை. விஜய் ஆட்சிக்கு வந்ததில் இருந்து இதுவரை சிறையிலிருந்து 50 கைதிகள் தப்பியோடியுள்ளனர். அப்படி என்றால், என்ன தான் நிர்வாகம் செய்கிறார் முதலமைச்சர் விஜய் என்று திமுக கேள்வி எழுப்பி உள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக சட்டத்துறை துணை செயலாளர் பரந்தாமன், சிறைக் காவலர்களைத் தாக்கிவிட்டு, பெரிய அளவில் கைதிகள் தப்பிச் சென்றது தமிழகத்தில் இதுவே முதல்முறை என்று சுட்டிக்காட்டினார்.
திமுக-வுக்கு திக் திக் நிமிடங்கள் என தவெக-வினர் கூறி வருகின்றனர். முதல்வர் விஜய் சிறையில் ஆய்வு செய்த பிறகு தொடர்ச்சியாக கைதிகள் தப்பியோடுகின்றனர். இதன்படி பார்த்தால் திமுக-வுக்கு அல்ல; தமிழ்நாட்டுக்குத்தான் திக் திக் நிமிடங்கள்.. தப்பியோடிய கைதிகளை பிடிக்க என்ன செய்யப் போகிறார் முதல்வர்! என்றும் பரந்தாமன் கேள்வி எழுப்பியுள்ளார். கத்தி படத்தில் மேப் போட்டு கைதிகளை பிடிச்சார்; இப்போ என பண்ண போறாரு? எனவும் ஆவேசம் கேள்வி எழுப்பினார். முதல்வர் புழல் சிறைக்கு ஆய்வுக்கு சென்றாரா அலல்து சோஷியல் மீடியாக்களில் வெளியன் தகவல்களின்படி பரிகாரத்துக்கு தான் சென்றாரா என்ற சந்தேகம் வலுக்கிறது. எப்போதுமே ஷூட்டிங்காக மட்டுமே வெளியே வருகிறார் முதல்வர் விஜய். மக்கள் பாதுகாப்பு பற்றி சட்டத்துறை அமைச்சருக்கு அக்கறை உள்ளதா எனவும் பரந்தாமன் கேட்டுள்ளார்.
சிறைச்சாலையை ஆய்வு செய்த முதலமைச்சரிடம் நாங்கள் மீண்டும் கேட்க விரும்புவது ஒரே ஒரு கேள்வியை தான். முதலமைச்சராக ஆய்வு செய்தீர்களா அல்லது ஜோசியக்காரர் சொன்னார் என்பதற்காகப் பரிகாரம் செய்யச் சிறைச்சாலையில் காலடி வைத்துவிட்டு வந்தீர்களா? நீங்கள் ஆய்வு செய்த உடனே 2 பேர் தப்பியோடிய நிலையில், தற்போது எண்ணிக்கை 50-ஆக உயர்ந்துள்ளது.


