Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

ரீல் அரசின் முதல் பட்ஜெட் Blast இல்ல Waste.. சொந்தமாவும் யோசிக்கல; சொன்னதையும் செய்யல - மு.க.ஸ்டாலின்

சென்னை: தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனத்தை அது சந்தித்துள்ளது. இந்த பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், 'Waste Waste' என கடுமையாக விமர்சித்து உள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், இன்று சட்டமன்றத்தில் வாசிக்கப்பட்ட பட்ஜெட் பற்றி Reels CM-க்குப் புரியும் மொழியில் சொல்ல வேண்டுமென்றால், 'Blast Blast'-ஆக இருக்கும் என எதிர்பார்த்த மக்களுக்கு, ‘Waste Waste' எனச் சொல்லும் படி இருக்கிறது. அதுமட்டுமின்றி முந்தைய திராவிட மாடல் அரசின் திட்டங்களின் ரீமேக் வெர்ஷனாகவே இந்த பட்ஜெட் உள்ளது.

மக்கள் மொழியில் சொல்ல வேண்டுமென்றால், விவசாயிகள் பிரச்சினை, மின் கட்டணக் குளறுபடி பிரச்சினை, விலைவாசி உயர்வுப் பிரச்சினை என எதைப் பற்றியும் கவலையின்றி, மாநிலத்திற்குத் தேவையான புதிய தொலைநோக்குத் திட்டங்களையும் அறிவிக்காத பட்ஜெட்டாக உள்ளது.

தவிர ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகை, வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ. 4 ஆயிரம், ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர், முழுப் பயிர்க்கடன் தள்ளுபடி, என முக்கிய வாக்குறுதிகள் எதைப் பற்றியும் மூச்சே விடாத பட்ஜெட்டாக உள்ளது. மொத்தத்தில் சொந்தமாகவும் யோசிக்காத, சொன்னதையும் செய்யாத, சுரத்தில்லாத - புஸ்வாண பட்ஜெட்டாகத்தான் ‘ரீல் அரசின்’ முதல் பட்ஜெட் அமைந்திருக்கிறது என்றும் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.