Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மக்கள் மீது வேண்டுமென்றே திணிக்கப்படும் இடைத்தேர்தல்.. கிரிமினல்களின் கேபினட்டாக இருக்கும் தவெக அமைச்சரவை.! இது தான் மாற்றமா?

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சட்டத்துறை இணைச்செயலாளர் பரந்தாமன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது ED-ஐ வைத்து பாஜக அரசு அச்சுறுத்துவதை போல, காவல் துறையை வைத்து தவெக அரசு மிரட்டுகிறது என்று குற்றம் சாட்டினார்.

நீதிமன்றத்திடம் மூக்கறுபட்டுள்ளது இந்த குதிரை பேர அரசு. அவதூறு பேசியதாக புனையப்பட்ட வழக்கில் வைத்து செய்யப்பட்ட திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணனை, அவசர அவசரமாக கைது செய்தது ஏன், அவதூறு வழக்கில் 6 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார். விசாரணை என்ற பெயரில் தவெக-வில் இணையுமாறு அனிதா ராதாகிருஷ்ணனை மிரட்டி உள்ளனர்.

அதே போல குற்றவாளிகள் நிரம்பியதாக தவெக அமைச்சரவை உள்ளது. சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் மீது ஏற்கனவே நிலமோசடி வழக்கு உள்ளது. நிதியமைச்சராக உள்ள அமைச்சர் மரிய வில்சன் மீது வீடு புகுந்த தாக்கிய கிரிமினல் வழக்கு உள்ளது. தவெக அமைச்சர்களுக்கு பொதுவெளியில் எப்படி பேசுவது என்றே தெரியவில்லை. அதிமுக எம்எல்ஏ-க்களை ராஜினாமா செய்ய வைத்து தவெக-வில் சேர்ப்பது தான் மாற்றமா? மாற்று கட்சி எம்எல்ஏ-க்களை ராஜினாமா செய்ய வைத்து வேண்டுமென்றே இடைத்தேர்தலைகளை மக்கள் மீது தவெக திணிக்கிறது, இது தான் தூய சக்தி செய்யும் செயலா?

தவெக அரசின் நடவடிக்கைகள் சட்டத்திற்கு புறம்பானவை. தவெக அரசில் அமைச்சர் பதவி பெற்று தருகிறேன், அதிமுக-வை விட்டு என்னை போல் நீங்களும் வந்து விடுங்கள் என விஜயபாஸ்கர் தன்னிடம் பேரம் பேசியதாக ஓ.எஸ்.மணியன் குற்றம்சாட்டியுள்ளதையும் பரந்தாமன் சுட்டிக்காட்டி உள்ளார்.