Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சுற்றுலா வளர்ச்சித் திட்டப் பணிகளை சிறப்பான முறையில் விரைவாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அமைச்சர் இராஜேந்திரன் உத்தரவு

சென்னை: சுற்றுலா வளர்ச்சித் திட்டப் பணிகளை சிறப்பான முறையில் விரைவாக மேற்கொள்ள அமைச்சர் இராஜேந்திரன் அறிவுரை வழங்கினார். சென்னை சுற்றுலா வளாக கூட்டரங்கில், சுற்றுலாத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலயங்கள் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் தலைவர் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் க.மணிவாசன் சுற்றுலா ஆணையர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தற்போது நடைபெற்று வரும் சுற்றுலா வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சுற்றுலாத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஆகியவற்றின் பிரிவுகள், கட்டமைப்பு வசதிகள், செயல்பாடுகள் குறித்தும் ஏற்கனவே நடைபெற்ற வளர்ச்சி பணிகள் குறித்தும் தற்போது நடைபெற வேண்டிய வளர்ச்சி பணிகளை விரைவுப்படுத்துவது குறித்தும் மாவட்ட சுற்றுலா அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார், இதனை தொடர்ந்து தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் நடத்தப்படும் ஓட்டல்களில் தரமான உணவு வழங்குதல், விருந்தோம்பல் மற்றும் ஓட்டல் வளாகங்களை தூய்மையாக பராமரித்தல் உட்பட உயர் தரமான சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டுமென்று ஓட்டல் மண்டல மேலாளர்கள் மற்றும் மேலாளர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.

2025-2026 ஆம் ஆண்டில் சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்களால் வெளியிடப்பட்ட அறிவுப்புகளை விரைந்து நிறைவேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள சுற்றுலாத் தலங்களில் அடிப்படை உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் மற்றும் புதிய சுற்றுலா தலங்களை கண்டறிந்து அவ்விடங்களில் உலக தரத்திலான அடிப்படை உள் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும், சுற்றுலா வளர்ச்சித் திட்டப் பணிகளை சிறப்பான முறையில் விரைவாக மேற்கொள்ள மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்கள். இக்கூட்டத்தில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக பொது மேலாளர் மற்றும் மாவட்ட சுற்றுலா அலுவலர்கள் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக ஓட்டல் மண்டல மேலாளர்கள் மற்றும் மேலாளர்கள் கலந்து கொண்டனர்.