Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்; ஒரேநாளில் 10,090 சுற்றுலா பயணிகள் வெளியேறினர்!

காஷ்மீர்: பயங்கரவாத தாக்குதல் நடந்த காஷ்மீரில் இருந்து ஒரேநாளில் 10,090 சுற்றுலா பயணிகள் வெளியேறினர். கடந்த 21ம் தேதி தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமின் மேல் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். 4 பயங்கரவாதிகள் நடத்திய இந்த துப்பாக்கிச்சூட்டில் 28 பேர் உயிரிழந்துள்ளார். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பஹல்காம் பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா பயணிகள்.

அவர்கள் தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு இந்தியா தரப்பில் பதிலடி கொடுக்கப்படும் என பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த தாக்குதலை தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் மூளும் சூழ்நிலையும் உருவாகியுள்ளது. பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், பல்வேறு அதிரடி நடவடிக்கையிலும் ஒன்றிய அரசு இறங்கியுள்ளது. இந்த நிலையில், பயங்கரவாத தாக்குதல் நடந்த காஷ்மீரில் இருந்து ஒரேநாளில் 10,090 சுற்றுலா பயணிகள் வெளியேறினர். ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இருந்து 10,090 பேர் வெளியேறிய நிலையில் 4,107 பேர் வருகை புரிந்தனர். ஸ்ரீநகரில் இருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு 110 விமானங்கள் இயக்கப்பட்டதாக ஒன்றிய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.