Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

விளைபொருட்களை பாதுகாக்க 43,500 விவசாயிகளுக்கு ரூ.10 கோடி செலவில் தார்பாய்கள்

சென்னை: தமிழக பேரவையில் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய வேளாண் துறை அமைச்சர் வினோத், விளைபொருட்களை பாதுகாக்க 43,500 விவசாயிகளுக்கு ரூ.10 கோடி செலவில் தார்பாய்கள் வழங்கப்படும் என அறிவித்தார்.

அதிக மகசூலை ஈட்டும் விவசாயிகளுக்கு அரசு சார்பில் வெற்றி விவசாய விருது வழங்கப்படும். இந்த விருது மாவட்ட அளவில் வழங்கப்படும். விவசாயிகளின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்ற ரூ.27.82 கோடி செலவில் புதிய ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்கள் அமைக்கப்டும் என்றார்.

ரூ.17 கோடியில் வேளாண் காடுகள் திட்டம் செயல்படுத்தப்படும். காட்டு பன்றிகளால் ஏற்படும் பயிர் இழப்புகளை தடுத்திட ரூ.7.35 கோடி மதிப்பில் காட்டுபன்றி சேத தடுப்பு திட்டம் செயல்படுத்தப்படும். பருத்தி உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் பருத்தி மறுமலர்ச்சி இயக்கம் அமைக்க ரூ.27.21 கோடி நிதி ஒதுக்கப்படும். ஆதி திராவிடர், பழங்குடியின சிறு, குறு விவசாயிகள் உயர் வேளாண் மதிப்பு திட்டத்தில் 20% கூடுதல் மானியம் வழங்கப்படும்.

அதே போல சிறு, குறு விவசாயிகளுக்கு அஞ்சலை அம்மாள் பெயரில் விருதுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ரூ.2.5 லட்சம், ரூ.1.5 லட்சம், ரூ.1 லட்சம் என மூன்று பரிசுகள் வழங்கப்டும். சிறந்த உயிர்ம விவசாயிகளுக்கான நம்மாழ்வார் விருது 5 விவசயிகளுக்கு வழங்கப்படும். ரூ.56.72 கோடி மதிப்பீட்டில் அண்ணல் அம்பேத்கர் வேளாண் உதவி திட்டம் செயகப்படுத்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.