Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழ்நாட்டில் திமுக கூட்டணி வாக்கு சதவீதம் 47%ல் இருந்து 52% ஆக அதிகரிப்பு : கருத்து கணிப்பில் தகவல்!!

சென்னை : இன்றைய தேதியில் மக்களவை தேர்தல் நடத்தப்பட்டால் திமுக கூட்டணி 39 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. Mood of the nation என பெயரில் நடத்தப்பட்ட ஆய்வில் பாஜகவும் அதன் முன்னாள் கூட்டணி கட்சியான அதிமுகவும் ஒரு இடங்களை கூட கைப்பற்றாமல் தோல்வியை தழுவும் என்று ஆய்வில் கணிக்கப்பட்டுள்ளது. அதே போல், 2024ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலை விட தற்போது 5% அதாவது 47%ல் இருந்து 52% ஆக திமுக கூட்டணியின் வாக்கு விகிதம் கூடும் என்றும் கூறப்படுகிறது.

அதே நேரத்தில் அதிமுகவுக்கு 3% வாக்குகள் குறைந்ததாக கூறும் கருத்து கணிப்பு, பாஜகவுக்கு 3% அதிகரித்ததாக கூறுகிறது. அதாவது அதிமுக 23%ல் இருந்து 20%ஆகவும் பாஜக 18%ல் இருந்து 21% ஆகவும் உயரும் என கூறப்பட்டுள்ளது. இந்தியா டுடே, சி -வோட்டர் இணைந்து கடந்த ஜனவரி 2ம் தேதி முதல் பிப்ரவரி 9ம் தேதி வரை அனைத்து மக்களவை தொகுதிகளிலும் ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 123 பேரிடம் கருத்துக்களை பெற்று புதிய நேர்காணல்கள் நீண்ட நேரம் கண்காணிப்புகள் அடிப்படையில் இந்த கருத்து கணிப்புகள் வெளியிடப்பட்டதாக தெரிவித்துள்ளது.