Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

சென்னை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக கோவை மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதேநேரம், தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு எனவும் தெரிவித்திருந்தது. மேலும் நாளை கோவை மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நீலகிரி, தேனி, தென்காசி, திண்டுக்கல், திருச்சி, நாகை, கடலூர், திருவள்ளூர், செங்கல்பட்டு, கோவை ஆகிய 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.