Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தமிழகத்தில் 3 இடங்களில் புதிய சுங்கச்சாவடிகளை திறப்பதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் 3 இடங்களில் புதிய சுங்கச்சாவடிகளை திறப்பதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது. விழுப்புரம் நங்கிளி கொண்டான், தி.மலை கரியமங்கலம், கிருஷ்ணகிரி நாகம்பட்டியில் சுங்கச் சாவடிகள் அமைக்கப்படுகிறது.

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலையில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுமார் 40க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளை அமைத்து கட்டணங்களை வசூலித்து வருகிறது. ஆண்டுக்கு இருமுறை சுங்கச்சாவடிகள் கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. பாதி சுங்கச்சாவடிகளில் முதல் 6 மாதத்திலும், மீதியுள்ள சுங்கச்சாவடிகளில் அடுத்த 6 மாதத்திலும் கட்டணம் உயர்த்தப்படும்.

தமிழகத்தில் காலாவதியான சுங்கச்சாவடிகள் உள்ளதாகவும், அவற்றை அகற்ற வேண்டும் எனவும் கோரிக்கை வைத்த நிலையில், தமிழகத்தில் மேலும் 3 இடங்களில் புதிதாக சுங்கச்சாவடிகள் அமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதற்கான கட்டண வீதமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி விழுப்புரம் மாவட்டம் நங்கிலி கொண்டான், கிருஷ்ணகிரி மாவட்டம் நாகம்பட்டி மற்றும் தி.மலை மாவட்டம் கரிய மங்கலம் ஆகிய 3 இடங்களில் சுங்கச்சாவடிகளுக்கான கட்டண வீதங்களை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.

விழுப்புரம் நங்கிளிகொண்டான் சுங்கச்சாவடியில் ஒரு முறை சென்றுவர ரூ.60 முதல் 400 வரை கட்டணம் வசூலிக்கப்படும், ஒரே நாளில் சென்று திரும்பி வருவதற்கான கட்டணம் ரூ.95 முதல் ரூ.600 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது எனவும் கரியமங்கலம் சுங்கச்சாவடியில் ஒருமுறை சென்று வர ரூ.55 முதல் ரூ.370 வரை சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படும், ஒரே நாளில் சென்று திரும்பி வருவதற்கான கட்டணம் ரூ.85 முதல் ரூ.555 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் நாகம்பட்டி சுங்கச்சாவடிக்கான கட்டண விவரமும் வெளியிடப்பட்டுள்ளது.